டெல்லியில் பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தலைநகர் டெல்லியிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நேற்று இரவு பூகம்பம்ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் 5.3 ஆக இது பதிவாகி இருந்தது.
வட இந்திய நகரங்களான நியூ டெல்லி, ஸ்ரீநகர், பாட்னா, கயா மற்றும் முசாப்பூர் ஆகிய இடங்களில் நேற்று(திங்கள்கிழமை) இரவு 9.40 மணியளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனால் பொது மக்களிடையே பீதி நிலவியது. ஆனால், இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தப் பூகம்பத்தின் அதிர்ச்சி பாகிஸ்தானிலும் எதிரொலித்தது. இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல் பிண்டி, மற்றும்லாகூர் ஆகிய இடங்களிலும் திங்கள்கிழமை இரவு 9.08 மணியளவில் லேசான பூகம்பம் ஏற்பட்டது.
இது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இதில் உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications