மக்களை ஏமாற்ற பார்க்கிறார் கருணாநிதி: ஜெ. விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி போகும் வழியில் தன்னைக் கொலை செய்ய போலீசார்திட்டமிட்டிருந்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளதை முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.

கருணாநிதியின் பேச்சை சிறுபிள்ளைத்தனமானது எனவும் விமர்சித்து உள்ளார்.

தான் கைது செய்யப்பட்ட போது போலீசார் தன்னை வேலூர் சிறையில் அடைக்க திட்டமிட்டு இருந்தனர். அவ்வாறுவேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்படும் போது தன்னை கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர் எனதி.மு.க.தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் கூறியிருந்தார்.

இதை ஜெயலலிதா மறுத்துள்ளார். சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

கருணாநிதி சொல்வதில் உண்மை கிடையாது. இது சிறுபிள்ளைத்தனமானது. கருணாநிதி மக்களை திசை திருப்பபார்க்கிறார். இதை கேட்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்உண்மைகள் கண்டு பிடிக்கப்படும்.

விசாரணை கமிஷன் பரிந்துரையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரை விசாரிக்கவிசாரணை கமிஷன் அமைக்கப்படுவது வழக்கமானதுதான்.

1968ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோதும், 1971ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதும்,1979ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போதும் போலீசாரை விசாரிக்க விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டது.

அதே போல் இப்போதும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது என்றார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+