திமுக கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் பொறுத்துக் கொள்வோம்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ம.க வந்தாலும் தி.மு.க கூட்டணியில் நீடிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியில் சேர்வது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை அவர்கள் சேர முடிவெடுத்தால்நாங்கள் வெளியேறுவோம் என்று எதிர் பார்க்க வேண்டாம்.

அப்படிப்பட்ட பிடிவாதப் போக்கு எங்களிடம் இல்லை. இருப்பினும் பஸ்ஸை எரிப்பது, மரங்களை வெட்டுவது, குடிசைகளை எரிப்பது போன்றசெய்கைகளை பா.ம.க. கைவிட வேண்டும்.

தி.மு.க கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் எங்கள் நிலை குறித்து செயற்குழுவில் வைத்து முடிவெடுப்போம்.

மேலும் தி.மு.க கூட்டணியில் நீடிக்கவே விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதலில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு. ஆனால், தேர்தலின்போது த.மா.கா. அதிமுககூட்டணியில் சேர்ந்தது. அதை ஏற்கவும் திருமாவளவன் தயாராக இருந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் வந்துசேர்ந்தைதயடுத்து த.மா.கவைவிட்டு விலகினார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின வட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி-விடுதலைச் சிறுத்தைகள் மோதல் உலகப் புகழ் வாய்ந்தது. இரு தரப்பினரும்அவ்வப்போது ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வது இங்கு சகஜம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+