மணிசங்கர் ஐயர் உருவ பொம்மை எரிப்பு: இளங்கோவன் ஆதரவாளர்கள் செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில்ஒருவரான மணி சங்கர் ஐயர் கூறிய கருத்துக்கு இளங்கோவன் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.

அவர்கள் புதன்கிழமை சென்னையில் மணிசங்கர ஐயரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பைவெளிப்படுத்தினர்.

செவ்வாய்க்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான மணிசங்கர ஐயர் போயஸ் தோட்டம்போய் ஜெயலலிதாவை சந்தித்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:

அ.தி.மு.கவுக்கு எதிரான கருத்துக்களை இளங்கோவன் வெளியிட்டு வருவது தவறானது. உள்ளாட்சி தேர்தலில்தனித்து போட்டியிட வேண்டும் என அவர் கூறுகிறார்.

தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் வெற்றி பெறாது. தோல்வியைத்தான் தழுவும். முன்னர் தனித்து போட்டியிட்டபோது காங்கிரஸ் தோல்வி அடைந்தது நினைவு கூறத்தக்கது.

எனவே அ.தி.மு,கவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதை இளங்கோவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் இளங்கோவன் உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து நான் கட்சி தலைவர் சோனியாகாந்தியிடம் பேச உள்ளேன் என்றார் மணிசங்கர் ஐயர்.

மணி சங்கர ஐயரின் இந்தக் கருத்தை இளங்கோவனின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

புதன்கிழமை காலை தென்சென்னை காங்கிரஸ் தலைவர் இல. பாஸ்கரன் தலைமையில் இளங்கோவன்ஆதரவாளர்கள் கூடி மணிசங்கர ஐயரின் கொடும்பாவியை எரித்தனர். அவர்கள் மணி சங்கர ஐயருக்கு எதிரானகோஷங்களையும் எழுப்பினர்.

மணிசங்கர ஐயரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்போவதாக கூறி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+