மீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சராக்க பிரதமர்வாஜ்பாய் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு தெஹல்கா டாட் காம் வெளியிட்ட ராணுவ பேர ஊழலில், பாஜகவின் மூத்த தலைவர்களின் சிலதலைகள் உருண்டதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவியைராஜினாமா செய்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி விலக வேண்டும் என்ற அவரது கோரிக்கையைவாஜ்பாய் ஏற்க மறுத்ததால் கூட்டணியிலிருந்து மம்தா விலகினார்.தொடர்ந்து பெர்ணான்டசும் பதவியைராஜினாமா செய்தார்.

அது மட்டுமில்லாமல், அவர் தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்தும் விலகிச் சென்றார். கடந்த மே மாதம்நடைபெற்ற மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, நன்றாகமண்ணைக் கவ்வியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.

இதையடுத்து, தன்னை எப்படியாவது தேசிய அரசியலில் மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டார் மம்தா. அதனால் அவருடைய குறி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கித்திரும்பியுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில், மம்தாவின் குறி தப்பாது என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மத்திய அரசுக்கு திமுக தொடர்ந்து நெருக்கடியை அளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், தங்கள் நிலைமை பற்றி யோசிக்கவேண்டியிருக்கும் என்று கருணாநிதியே கூறியுள்ளார். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து எந்தநேரம் வேண்டுமானாலும் திமுக கழன்றுவிடும் என்று பா.ஜ.க. அஞ்சுகிறது.

அதனால், மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, திரிணாமூல் காங்கிரசை மீண்டும் கூட்டணியில்சேர்த்துக் கொள்ள பாஜக தயாராகத்தான் இருக்கிறது. மேலும், மம்தா பானர்ஜிக்கு திரும்பவும் ரயில்வே அமைச்சர்பதவியைக் கொடுப்பதற்கு பிரதமர் முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக, வரும் ஜூலை 22ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. 23ம் தேதி துவங்கவிருக்கும்நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாகவே புதிய அமைச்சரவையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதற்காகவேஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் திரிணாமூல் கட்சி சேருவதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும்கூறப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் எப்படியாவது தேசியஜனநாயகக் கூட்டணியில் சேரவேண்டும் என்று முயற்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+