பரிதி வழக்கில் போலீஸ் கமிஷனர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:
தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி தொடர்ந்த வழக்கில் சென்னைபோலீஸ் கமிஷனர் முத்துக் கருப்பன் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதில் தாம் தாக்கப்பட்டதாக பரிதிஇளம்வழுதி புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் ஜான்பாண்டியனைக்கைது செய்து சிறையில் அடைத்ததனர்.
ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர். அப்போது திமுக ஆட்சி நடந்தது.
அதன் பிறகு வந்த தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்குச் சாதகமாக வந்தது.
இதையடுத்து அதே போலீசார் பரிதிஇளம்வழுதி தான் கலவரத்திற்கு காரணமாக இருந்தார் என்று வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததனர்.
இதையடுத்து பரிதிஇளம்வழுதி தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் மீதும் துணைக் கமிஷனர் ராஜேந்திரக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவர்கள் 2 பேரையும் இன்று (புதன்கிழமை) கோர்டில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று முத்துக்கருப்பனும் ராஜேந்திரக்குமாரும் கோர்டில் ஆஜராயினர். ஆனால், விளக்கம் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் (ஆகஸ்டு)1ம் தேதிக்குள்விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications