ஆக்ரா பேச்சு தோல்வி: தே.ஜ. கூட்டணி அவசர கூட்டம்
டெல்லி:
ஆக்ரா பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் இது தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுக்கு விளக்கமளிக்கதேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை இன்று (புதன்கிழமை) மாலை கூட்டியுள்ளார் பிரதமர்வாஜ்பாய்.
பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் இந்த 2 நாட்களிலும் 4 முறை பேசியும்,பேச்சுவார்த்தை எந்தவிதமான பலனையும் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக, முஷாரப்பும்வாடிய முகத்துடன் இஸ்லாமாபாத் போய்ச் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள சில கட்சிகள் இந்தப்பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இக்கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகவும்,பாஜகவின் மிக நெருங்கிய கட்சியாகவும் கருதப்படும் சிவசேனா முஷாரப் இந்தியாவிற்கு வருவதை கடுமையாகஎதிர்த்தது.
பேச்சுவார்த்தை நடந்த ஞாயிற்றுக்கிழமை கூட, ஆக்ராவில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை எரித்து,ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் சிவசேனா கட்சித் தொண்டர்கள். டெல்லியிலும் பாகிஸ்தான் கொடி எரிப்பில்இவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும், ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி வாஜ்பாய் இதுவரை மூச்சு விடாமல் இருந்ததையும் சிவசேனா தலைவர்பால்தாக்கரே செவ்வாய்க்கிழமை கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்நிலையில், ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி கூட்டணிக் கட்சிகளிடம் விளக்குவதற்காக, புதன்கிழமை மாலைநடைபெறும் அவசரக் கூட்டத்திற்கு வாஜ்பாய் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனா கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே, அரசின் கருத்துக்களைத்தான் பிரதிபலிக்கின்றன.
இதேபோல, ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி விளக்குவதற்காக, தேசியப் பாதுகாப்பு கவுன்சிலையும் பாகிஸ்தான்அமைச்சரவையையும் புதன்கிழமை மாலை கூட்டவுள்ளார் அந் நாட்டு அதிபர் முஷாரப்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications