வீரப்பன் வேட்டை: அதிரடிப்படையினர் தீவிரம்
ஈரோடு:
அந்தியூர் வனப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அடுத்து அங்கு தேடுதல்பணியை தீவிரப்படுத்த அதிரடிப்படையினர் திட்டமிட்டு உள்ளனர். மேலும் வீரப்பனுக்கு உதவும் உளவாளிகளைக்கண்டு பிடிக்குமாறும் உள்ளூர் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
வீரப்பனுக்கு ஒத்துழைக்கும் கிராம மக்கள், அதிரடிப்படையுடன் ஒத்துழைக்காகதுதான் இதற்கு முக்கிய காரணமாகக்கூறப்படுகிறது.
இதுவரை வீரப்பனை தேடி வந்த அதிரடிப்படையினர் சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் பகுதிகளை மையமாகவைத்து வீரப்பனை தேடி வந்தனர். இதனால் அந்தியூர் வனப்பகுதியில் அதிகமான கவனம் செலுத்தப்படவில்லை.
சத்தியமங்கலம் பகுதியைவிட வீரப்பன் நடமாட்டம் பர்கூர்ரை சுற்றி இருக்கும் பகுதியில்தான் அதிகமாக இருந்துவந்திருக்கிறது. வீரப்பனுடன் தொடர்பு கொண்டுள்ள நக்சலைட்டுகளும் அந்தியூருக்கு அருகே உள்ள மணல்காடுவழியாகத்தான் அடிக்கடி வனப்பகுதிக்குள் சென்று வந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், அவரை விடுதலை செய்ததும் இந்தபகுதியில்தான்.
பர்கூர் வனபகுதியல் அடர்ந்த காடுகளும், வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. மேலும்,சோளைகணை, கத்திரிமலை, உகினியம், நகலூர், பத்ரிபடுகு பகுதிகளில் வீரப்பனுக்கு உளவு செல்லும் பலரும்இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
மழைக் காலம் துவங்கிவிட்ட காரணத்தால், சத்தியமங்கலம் பகுதியை விட அந்தியூர் வனப்பகுதிதான்வீரப்பனுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், இப்பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையைதீவிரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், வீரப்பன் நடமாட்டம் பற்றிய தகவல்களை அதிரடிப்படை உளவுத் துறையினர் சேகரித்து உள்ளனர்.
வீரப்பன் தேடுதல் வேட்டை பற்றி, ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில் அந்தியூரில் உயர் போலீஸ் அதிகாரிகள்பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிரடிப்படை டி.ஐ.ஜி.தமிழச்செல்வன், எஸ்.பி. பெரியய்யா, பவானி டி.எஸ்.பி. நிர்மல்குமார்ஜோஷி மற்றும் அதிரடிப்படை கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பர்கூர், பங்களாப்புதூர்,பவானி பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம் டி.எஸ்.பி வரதராஜன தலைமையில் சத்தியமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்ஐ.ஜி.விஜயகுமார், சததியமங்கலம்,. தாளவாடி, ஆசனூர், கடம்பூர், திங்களூர், பவானிசாகர், டி. புளியம்பட்டி காவல்துறை அதிகாளுடன் ஆலோசனை செய்தார்.
வீரப்பனுக்கு உளவு சொல்பவர்கள் பற்றி தகவல் சேகரிக்குமாறும், அவர்களை கண்காணித்துஅதிரடிப்படையினருக்கு தகவல் கூறுமாறும் உள்ளூர் போலீசார் கேட்டுக் கொள்ள்ப்பட்டனர்.
இந்நிலையில் பர்கூர் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, சின்னமலைபகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த கொளத்தூரைச் சேர்ந்த ரங்கசாமி, தங்கராஜ், குழந்தைசாமி ஆகிய 3பேரை பிடித்து விசாரித்தனர்.
சில தினங்களுக்கு முன் இவர்களை அதிரடிப்படையினர் கைது செய்தனர். வீரப்பனை தேடும் பணியில்அதிரடிப்படையினர் ஈடுபட்டிருக்கும் போது இவர்கள் வேட்டையாட வந்ததாக கூறியது சந்தேகத்தை ஏற்படுத்திஇருக்கிறது.
இவர்கள் மூலமாக வீரப்பனுக்கு தகவல்கள் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர்.பிடிபட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications