பலத்த பாதுகாப்புடன் அமர்நாத்தில் குவியும் பக்தர்கள்
டெல்லி:
பலத்த பாதுக்காப்புக்கு இடையே தினமும் 3,500 பக்தர்கள் ஜம்முவிருந்து அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்யாத்திரையை மேற் கொள்வது வழக்கம்.
சிறிய மலைப்பாதையில் கடும் சிரமத்துடன் பக்தர்கள் ஏறி அமர்நாத் குகையை அடைந்து சிவபெருமானைதரிசிப்பது வழக்கம்.
தீவிரவாதிக தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அமர்நாத் யாத்திரை பாதையில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
யாத்ரிகர்கள் தங்குவதற்காக 14 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் 24மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கென சாகுவா, புனித குகையாக கருதப்படும் படாலால், பஞ்சாத்ரினி, ஷேஷாங், போஷ்பாத்ரி, ஜோசிபால்,பிசுடாப், பாலகம், சண்டாம்வாரியில் அமைக்கப்பட்டுள்ள யாத்திரிகர்களுக்கான முகாமைச் சுற்றிலும் காவல்பலப்படுத்தப்பட்டுள்ளது
இது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சி.ஆர்.பி.எப்.) செய்தித் தொடர்பாளர் டி.ஜி. மல்ஹோத்ராகூறும்போது:
தினமும் 3,500 யாத்ரிகர்கள் ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரையை மேற் கொள்கின்றனர். அமர்நாத்யாத்திரை பாதை முழுவதும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்பின் 10 கம்பெனிகள் ஜம்மு பகுதியிலும், 26 கம்பெனிகள் காஷ்மீர் பகுதியிலும் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பானிகாலிலிருந்து பாலகம் செல்லவும், அங்கிருந்து திரும்பி வரும் பக்தர்களைபாதுகாப்பாக அனுப்பி திரும்ப அழைத்து வர 3 கம்பெனி சி.ஆர்.பி.எப்பும், 2 வீரர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுஉள்ளன.
இது தவிர, சி.ஆர்.பி.எப்பின் மோப்ப நாய்களும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பல இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மல்ஹோத்ரா.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications