பார்வையற்ற இசைக்குழுவுக்கு ஜெ. உதவி
சென்னை:
இசைக்குழு நடத்திவரும் 20 பார்வையற்றவர்களுக்கு நிதிஉதவி வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஆனால் வறுமை காரணமாக அவர்களால் புதிய இசைக்கருவிகள் வாங்கமுடியாமல் திணறி வந்தனர். அவர்கள்தங்கள்நிலையை எடுத்துக்கூறி தங்களுக்கு உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தனர்.
அவர்கள் மனுவை பெற்ற முதல்வர் அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அதன் படி வியாழக்கிழமைஜெயலலிதாஅவர்களுக்கு ரூ 1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
புதிய இசைக்கருவிகள் வாங்கவும், அவர்கள் சொந்த நலனுக்காகவும் இந்த நிதி உதவி அவர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. ரூ.75,000 முதல்வரின் நிவாரணநிதியில் இருந்தும், ஊனமுற்றோர் நல நிதியில் இருந்து மீதித்தொகையும் வழங்கப்பட்டது.
பார்வையற்றோர் இசைக்குழுவினர் முதல்வர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
ஏழை மாணவர்களுக்கு உதவி:
வறுமை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த 3 ஏழை மாணவர்களுக்கு முதல்வர்ஜெயலலிதா நிதி உதவி வழங்கினார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பிய விழுப்புரம் ராஜ்குமார், கடலூர் கலைமணி ஆகிய 2 மாணவர்களுக்கும்தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்மற்றும் டெலிகம்யூனிகேஷன் படிப்பில் சேர விரும்பிய விருதுநகர் சுரேஷ்குமார் என்ற மாணவருக்கு ரூ.50,000 நிதி உதவியைஜெயலலிதா வழங்கினார்.
எம்.ஜி.ஆர். டிரஸ்டில் இருந்து இந்த நிதி உதவி வழங்கப்பட்டது. அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்ததகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிதி உதவி பெற்ற 3 மாணவர்களும் தக்க சமயத்தில் முதல்வர் செய்த உதவிக்குநன்றி கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications