காஷ்மீர்: 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஒரு பாகிஸ்தான் ஊடுருவல்காரர் உட்பட 9 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் முஸ்லிம் தீவிரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலதீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தவிர, கூப்வாராவின் தூத்நார் காலி எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் கர்னா பகுதியில் கொல்லப்பட்டனர். கலரூ பகுதியில் நடந்த தேடுதல் பணியின் போதுஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.
நாவ்காம் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இச்சண்டையில் வீட்டிற்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிஉட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டை காரணமாக ஒரு வீடும் பலத்த சேதமடைந்தது.
தெற்குகாஷ்மீரின், புலாவாமா கிராமத்தில் இருந்த முகமது அஷ்ராப் என்பவரை தீவிரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொன்றனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications