இனக் கலவரம் குறித்து விசாரிக்க உண்மை அறியும் கமிஷன்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்ததமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் குறித்து விசாரிக்க உண்மையை விசாரிக்கும்கமிஷன் என்ற பெயரில் ஒரு கமிஷனை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅமைத்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தையடுத்துசிங்கள வெறியர்களை எதிர்த்துப் போராட உருவாயின பல போராட்டக் குழுக்கள்.இதில் தொடர்ந்து தனது அதி பயங்கர தாக்குதல்கள், மிகத் திட்டமிட்ட செயல்பாடுஆகியவற்றின் மூலம் இலங்கை ராணுவத்தை திக்குமுக்காடச் செய்துவருகிறதுவிடுதலைப் புலிகள் இயக்கம்.

சிங்கள ராணுவத்தின் கீழ் தமிழர்கள் வாழ இயலாத நிலை உருவானதால் விடுதலைபுலிகள் தனி தமிழ் ஈழம் வேண்டும் என கேட்டு போராடி வருகிறார்கள்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தையை ஏற்படுத்த நார்வே அரசு முயன்று வருகிறது.

இந்நிலையில் 1981- 1984ம் ஆண்டுவரை நடந்த இனக்கலவரத்தின் நடந்தஉண்மைகள் என்ன என்பது குறித்து விசாரிக்க உண்ணை கமிஷன் ஒன்றை இலங்கைஅதிபர் அமைத்துள்ளார்.

இது குறித்து அதிபர் அலுவக அதிகாரிகள் கூறுகையில்,

இந்தக் கமிஷன் 1981- 1984ம் ஆண்டு வரை நடந்த இனக்கலவரம் குறித்தவிசாரிக்கும். கமிஷனில் 3 பேர் இடம் பெற்றிருப்பார்கள். முன்னாள் தலைமை நீதிபதிஎஸ். சரவணானந்தா, அதபரின் வக்கீல் எஸ்.எஸ். சாபாந்து மற்றும் முன்ளாள் எம்.பி.ஜுகைர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.

குறிப்பாக 1983ம் ஆண்டு நடந்த நடந்த கலவரத்தில் அதிமானவர்கள் உயிரிழந்தனர்.அது குறித்து கமிஷன் முக்கியமாக விசாரிக்கும்,

மேலும் 1983ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் தாக்கி சிதைக்கப்பட்டதுகுறித்தும் கமிஷன் விசாரிக்கும்.

இந்த கமிஷனின் நோக்கம் இனக்கலவரம் குறித்து விசாரித்து உண்மைகளை கண்டறியவேண்டும் என்பதும், மீண்டும் மனித உரிமைகள் மீறப்படாமல் மனித உரிமைகள்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், நாட்டின் ஒற்றுமைையை பாதுகாக்க வேண்டும்என்பதும், அனைத்து தர மக்களிடையும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்என்பதுதான்.

இனக்கலவரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ளமக்களிடம் விசாரணை நடத்தி உண்மைகள் அறியப்படும். அதன் பின்புஇனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தக்கமீட்பு உதவி வழங்கப்படும் என்று கூறினர்.

1983ம் ஆண்டுமுதல் நடந்து வரும் இனக் கலவரம் மற்றும் போரில் இதுவரை 70,000மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக எத்தனையோ கமிஷன்கள்அமைக்கப்பட்டுவிட்டன. எத்தனையோ அறிக்கைகளும் சமர்பிக்கப்பட்டுவிட்டன.எல்லாம் கண்துடைப்பாக போனதே தவிர உரிய நடவடிக்கை எதையும் இலங்கைஅரசு எடுத்ததில்லை.

இந்த கமிஷனும் வெறும் கண்துடைப்பானால், அது இலங்கை அரசுக்கும் சரி,தமிழர்களுக்கும் சரி, உதவப் போவதில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+