ஊழல் ஆவணங்களை திருட முயன்றார் ஸ்டாலின்: அதிமுக குற்றச்சாட்டு
திருச்செங்கோடு:
சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை திருட சென்னைநகர மேயர் ஸ்டாலின் முயற்சித்தார் என்று தமிழக அமைச்சர் பொன்னையன் மிகக்கடுமையான குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்நின்று வெற்றி பெற்றார். பொன்னையன். இவர் தற்போது தமிழக அமைச்சரகாவும்இருந்து வருகிறார்.
இவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்செங்குகோடுக்குசனிக்கிழமை வந்திருந்தார்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் எதிர்க்கட்சியினர் பல பிரச்சனைகளை தருகின்றனர்.கோயம்புத்தூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் கருணாநிதி என்று முன்பு சிவாஜிகணேசன் கூறி இருந்தார்.
அவ்வாறு திருட்டு ரயில் ஏறி வந்தவர் இன்று பல கோடி மதிப்பு உள்ள டி.வி.சேனல்களை வைத்துக் கொண்டு நாட்டிற்கு நடித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இதை அ.தி.மு.கவோ. ஜெயலலிதாவோ கூறவில்லை. தி.மு.க. கூட்டணியில் இருந்துவந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் கவர்னிடம் மனு கொடுத்தனர்.
டாடா - டிஸ்கோ கம்பெனி மூலம் 1 கிலோ இரும்பு 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஆனால், சென்னையில் மேம்பாலம் கட்டிய மேயர் ஸ்டாலினுக்கு மட்டும் 84ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் ரூ 4.5 கோடி ஊழல் நடந்துள்ளது.
மேயர் என்பவர் ரூ 10 லட்சத்துக்கு மேல் திட்டம் தீட்ட அரசியம் அனுமதி பெறவேண்டும்.
ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் ரெக்கார்டு இருப்பதுதெரிந்து அதை திருடுவதற்கு ஸ்டாலின் முயற்சி செய்தார். ரெக்காார்டுகளை கருணாநிதிவீட்டிற்கும், மாறன் வீட்டிற்கும் எடுத்துச் செல்ல ஸ்டாலின் முயற்சி மேற் கொண்டார்.அதை நாங்கள் முறியடித்துவிட்டோம்.
அதே போல, போலீசார் கருணாநிதியை கைது செய்தபோது. அவர் அமைதியாகசிரித்துக் கொண்டு என்ன குற்றம் என்றுதான் விசாரித்தார்.முரசொலி மாறன் வந்தபின்புதான் நிலைமை மாறியது. மாறன் போலீஸ் டி.ஐ.ஜியை. தாக்கினார்.
நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது மாறன் குடும்பத்திற்கும், கருணாநிதிகுடும்பத்திற்கும் உள்ள குடும்ப சண்டையில் கருணாநிதியை கொல்ல மாறன் கும்பல்நினைத்ததோ என்ற சந்தேகமும் வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications