போக்குவரத்து கழகங்களால் ரூ.17 பில்லியன் இழப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

போக்குவரத்துக் கழகங்களால் ரூ.17 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழகபோக்குவரத்துத் துறை ஊழியர் சங்கம் கூறியுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 8வது ஆண்டு விழா சனிக்கிழமைதுவங்கியது. இந்த விழா இன்று முடிவடைகிறது.

ஆண்டுவிழாவை துவக்கி வைத்த பின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த அரசு போக்குவரத்துத் துறையை புறக்கணித்து விட்ட காரணத்தால் தமிழகத்தில்உள்ள 21 போக்குவரத்துக் கழகங்களும் மோசமான நிலையில் உள்ளன.

போக்குவரத்துக் கழகங்களை சரிவர நிர்வாகிக்காத காரணத்தால் ரூ.17 பில்லியன்அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .

மற்ற மாநில அரசுகள் போக்குவரத்து துறைக்கு மானியம், நிதி உதவி வழங்குகின்றன.ஆனால் தமிழக அரசு அதுபோல் எதுவும் வழங்குவதில்லை.

தமிழக போக்குவரத்து துறையை சீரமைக்கவும், புதிதாக 3,500 பஸ்களைவாங்குவதற்காகவும் ரூ 5 பில்லியன் வழங்குமாறு அரசையும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+