கனடாவில் இந்தியர்களுக்குக் குறைந்த செலவில் கல்வி
சென்னை:
கனடாவில் சென்று பயில விருப்பப்படும் இந்திய மாணவர்களுக்குக் குறைந்த செலவில் தரமான கல்வியைஅளிப்பதற்குக் கனடா தயாராக உள்ளது என்று இந்தியாவிற்கான கனடா தூதர் பீட்டர் சுதர்லேண்ட் சென்னையில்திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்தியா-கனடா ஆகிய 2 நாடுகளுக்குமிடையே ஏராளமான வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கும்கனடாவின் புதிய அரசு விரும்புகிறது.
இதற்காக 100 உறுப்பினர்கள் கொண்ட கனடா நாட்டுக் குழுவினர், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் வந்துஇறங்க உள்ளனர். டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்யும் இக்குழுவினர்,முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக, இந்திய தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன், கனடாவுக்குச் சென்று பலமுக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
இந்தியாவின் டெல்லி, மும்பை நகரங்களிலிருந்து கனடாவின் டொரான்டோ, வான்கூவர் நகரங்களுக்கு நேரடிவிமானத்தை விரைவில் இயக்குவதற்கு கனடா 3000 என்ற தனியார் விமான நிறுவனம் முன் வந்துள்ளது.சென்னையிலிருந்து இந்த 2 கனடா நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை இயக்கவும் முயற்சிகள்மேற்கொள்ளப்படும்.
சாப்ட்வேர் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, உயிர்த் தொழில்நுட்பத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரஉற்பத்தித் துறையிலும் 2 நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்றார் சுதர்லேண்ட்.
இந்தியர்கள் அதிக அளவில் கனடாவிற்கு வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த சுதர்லேண்ட், கடந்த ஆண்டுமட்டும் 22,000 இந்தியர்கள் கனடாவுக்கு வந்து இறங்கியுள்ளனர் என்றும், தற்போது சுமார் 8 லட்சம் இந்தியர்கள்கனடாவில் வசித்து வருகின்றனர் என்றும் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications