குளித்தலை அருகே 3 பேர் படுகொலை
குளித்தலை:
குளித்தலை அருகே பழிக்கு பழி வாங்கும் விதமாக 13 பேர் கொண்ட ஒரு கும்பல் 3 பேரை அரிவாளால் வெட்டிகொடூரமாக கொலை செய்தது.
கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே உள்ள சூரியனூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 30). அதே ஊரைச்சேர்ந்தவர்கள் கிட்டான் (வயது 31), கருப்பண்ணன் (19).
இவர்கள் இருவர் வீடும் பக்கத்தில் உள்ளன. கருப்பண்ணன் சாராய வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தார். சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வந்தார்.
சம்பவம் நடந்த நாளன்று இரவு 13 பேர் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் சிதம்பரம், கிட்டான்,கருப்பண்ணன் வீடுகளுக்குச் சென்று அவர்களை எழுப்பி வெளியே வரச் செய்தது. வெளியே வந்த அவர்களைஇந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இந்த கொலையை சூரியனூரைச் சேர்ந்த சக்திவேல், கந்தன், பழனிச்சாமி, நாகராஜ், குட்டாரி, அன்பு, வைரமணி,அருணாசலம், ராஜேந்திரன், பனையடியான், ரங்கராஜ், சுப்பிரமணி, மேகநாதன் ஆகிய 13 பேரும்செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது.
இந்த கொலை சம்பவம் பழி வாங்கும் சம்பவம் என்றும் தெரிய வந்துள்ளது.
சூரியூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் சென்ற மாதம் அமாவாசையன்று ஜீயபுரம் சென்றிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டது. அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்திருக்க்கூடும் என்று கூறப்படுகிறது.
சூரியனூரில் கடந்த சில மாதங்களாக இரு கோஷ்டியினருக்கு ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் கொலைசெய்து கொண்டு வருகின்றனர்.
இப்போது கொலை செய்யப்பட்டுள்ள கருப்பண்ணனின் அக்காள் மகள் மல்லிகாவும், அவரது கணவர் ரத்தினமும் 9மாதங்களுக்கு முன்பு உரம் வாங்குவதற்காக வெளியூர் சென்றனர். அவர்கள் இன்றுவரை திரும்பவில்லை.அவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்குஅனுப்பப்பட்டு உள்ளது.
கொலை செய்தவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அங்கு அதிகஅளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications