காசி, ராமேஸ்வரத்தில் அஸ்தி கரைப்பு
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனின் அஸ்தி 16ம் நாள் காரியத்துக்குப் பின், காசி மற்றும் ராமேஸ்வரத்தில் கரைக்கப்படும்என்று அவருடைய குடும்பத்தினர் கூறினர்.
திங்கள்கிழமை பகல் 12.30 மணியளவில் சிவாஜியின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.
பின்னர் மாலை 3.30 மணியளவில் அவருடைய அஸ்தி சேகரிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சிவாஜியின்மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபுவிடம் அஸ்தி கலசங்கள் வழங்கப்பட்டன.
அவர்கள் 2 பேரும் பெசன்ட் கடற்கரைக்குச் சென்று நீராடிவிட்டு, அஸ்தியுடன் வீடு திரும்பினர்.
சிவாஜியின் குடும்ப வழக்கப்படி, இறந்தவர்களுக்கு 15ம் நாளில் காரியம் செய்யப்படும். பின்னர் கருமாதிகாரியங்களும் நடைபெறும்.
காரியம் முடிந்த மறுநாள் சிவாஜியின் அஸ்தி காசியில் உள்ள கங்கை நதியில் கரைக்கப்பட உள்ளது.
அதே நாளிலேயே ராமேஸ்வரம் கடலிலும் அவருடைய அஸ்தி கரைக்கப்படும் என்று சிவாஜியின் குடும்பத்தினர்கூறினர்.












Click it and Unblock the Notifications