சண்டை தொடர்கிறது: 9 புலிகள், 3 ராணுவத்தினர் சாவு
கொழும்பு:
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையேதொடர்ந்து பயங்கர சண்டை நடந்து வருகிறது.
புலிகளின் தற்கொலப் படையினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்துக்குள்நுழைந்துள்ள விடுதலைப் புலிகளில் கடைசி புலி உயிருடன் இருக்கும் வரையில் தாக்குதல் தொடரும் எனக்கருதப்படுகிறது.
இதில் ஒரு புலி விமான நிலைய கண்காணிப்பு அறையில் பதுங்கியிருந்தார். அவரை இலங்கை ராணுவகமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். மற்றொரு விடுதலைப் புலி ராணுவத்தினரிடம் பிடிபடும் முன் தன் உடலில்அணிந்திருந்த குண்டுகளை இயக்கி தன்னைக் தானே தகர்த்துக் கொண்டார்.
புலிகள் நடத்திய தாக்குதலில் தீப் பிடித்த 8 போர் விமானங்களும், 4 பயணிகள் மானங்களும், மிகப பெரியபெட்ரோல் சேமிப்பு டாங்குகளும் தொடர்ந்து எரிந்து கொண்டுள்ளன.
எல்லா பக்கமும் துப்பாக்கிக் குண்டுகள் சீறிக் கொண்டிருப்பதால் தீயணைப்புப் பணியில் யாரும் ஈடுபட முடியாதநிலை நிலவுகிறது. இதனால் இந்த விமானங்கள் தொடர்ந்து எரிந்து சாம்பலாகிக் கொண்டுள்ளன.
பெட்ரோல் டாங்குகள் தீப்பிடித்து எரிவதால் அந்தப் பகுதியே பல கி.மீ. தொலைவுக்கு புகைமூட்டமாகக்காணப்படுகிறது.
பெரும் வெடிச்சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. துப்பாக்கிகள் குண்டுகளை தொடர்ந்து கக்கியவண்ணம் உள்ளன.
கடந்த 9 மாதங்களில் புலிகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது தான். கடந்த டிசம்பர் மாதம் விடுதலைப்புலிகள் ஒருதலைப் பட்சமாக சண்டை நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால், இதை இலங்கை அரசு ஏற்கவில்லை.தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து புலிகளும் தங்கள் போர் நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
9 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications