"கறுப்பு பூனை படை" தலைவரானார் முன்னாள் தமிழக டி.ஜி.பி.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் தமிழக டி.ஜி.பியான ஆர். ராஜகோபாலன், கறுப்புப் பூனைப்படை என்று அழைக்கப்படும் தேசியப்பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி.) டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப் பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் காவல்துறைத் தலைவராகவும், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராகவும் இருந்துள்ளார்.
கடந்த மே மாதம் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக டி.ஜி.பியாக இருந்த ராஜகோபாலனைத் தூக்கிஎறிந்து விட்டு, ஏ. ரவீந்திரநாத் என்பரை நியமித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications