தற்கொலைப் படையில் இருந்த 13 பேர்
கொழும்பு:
இலங்கை சர்வதே விமான நிலையத்தில் தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகளின் குழுவில் 13 பேர் இருந்ததுதெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்தவர்கள்.
8 ராணுவ விமானங்களுடன் 5 பயணிகள் விமானங்களும் இந்தத் தாக்குதலில் சேதமைடந்தன.
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே சுமார் 6 மணி நேரம் சண்டை நீடித்தது. கொல்லப்பட்ட 9 புலிகளுடன்வந்த 4 புலிகள் தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடும் பணி நடக்கிறது. கொழும்பு முழுவதும் தேடுதல்வேட்டை நடக்கிறது.
இந்தத் தாக்குதலையடுத்து கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டதாக சர்வதே அளவில் இலங்கை அரசுசெய்தியை அனுப்பியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு வர இருந்த அனைத்து சர்வதேச விமானங்களையும்அந்தந்த நாடுகள் ரத்து செய்துவிட்டன.
புலிகளின் தாக்குதலைத் தொடங்கியபோது சில விமானங்கள் கிளம்புவதற்குத் தயாராக இருந்தன. விமானங்கள்மீது புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பட்டுச் சிதறிய சத்தம் கேட்டவுடன் பயணிகள் அலற ஆரம்பித்தனர்.இதையடுத்து அனைவரும் கீழிறக்கப்பட்டு பாதுகாப்பாக விமான நிலையத்துக்கு வெளியே அழைத்துச்செல்லப்பட்டனர்.
புலிகளும், ராணுவத்தினரும் ஒருவர் மீது ஒருவர் சுட்டுக் கொண்டபோது தங்கள் தலைக்கு மேல் பல குண்டுகள்பறந்து சென்றதாக பல பயணிகள் கூறினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தப் பயணியும் காயமடையவில்லை.
சண்டை முடிந்த பின்னர் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனிருந்த ரத்வதேயும் முப்படைகளின் தலைவர்களும்விமான நிலையத்தைப் பார்வையிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications