சிவாஜி வீட்டருகே மு.க. முத்து கலாட்டா
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து, குடிபோதையில் சிவாஜி வீட்டருகே அழகிகளுடன்வந்திறங்கி ஒயின் ஷாப்பை திறக்கச் சொல்லி கலாட்டா செய்தார்.
ஆத்திரமடைமந்த முத்து, "சிவாஜி செத்துப் போயிட்டா உலகமே இயங்காம போயிடணுமா? மரியாதையாகடையைத் திறங்கடா" என்று சத்தம் செய்தார். இவர் கூச்சலைக் கேட்டு அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
மீண்டும், ஆத்திரமடைந்த முத்து தன்னுடன் வந்திருந்த அழகிகளைத் தன் காலால் உதைக்க ஆரம்பித்தார்.அவர்களையும் வசைபாட ஆரம்பித்தார். அங்கிருந்த சில "உடன்பிறப்புகள்" முத்துவிடம்"வீட்டுக்குப் போங்கண்ணா,எத்தனை பாட்டில் வேண்டுமானாலும் வாங்கித் தறோம்", என்று சொல்லிப் பார்த்தனர்.
இதைக்கேட்ட முத்து,"எங்கடா உங்க எம்.எல்.ஏ. கூப்பிடுடா அவனை" என்று அவர்களையும் கலாய ஆரம்பித்தார்.சற்று நேரத்தில் அங்கு வந்த திமுக பிரமுகர்கள், சிலர் அங்கு கூடி அவரைக் கஷ்டப்பட்டு சமாதானப் படுத்தி,முத்துவையும் அந்த 2 அழகிகளையும் ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!