அவசர பெண் போலீஸ் 1091
சேலம்:
அவசர போலீஸ் பிரிவு இருப்பதைப் போல, பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க அவசர பெண்போலீஸ் பிரிவும் துவங்கப் பட்டுள்ளது.
இவற்றைத் தடுக்க, எம்.ஜி.ஆர். ஆட்சியில் முதன்முதலில் சென்னையில் பெண் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.பின்னர் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் தமிழகமெங்கும் பெண் போலீஸ் ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக தற்போது தனியாக அவசர பெண் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசுமுடிவெடுத்துள்ளது. அதன்படி அனைத்து பெண் போலீஸ் ஸ்டேஷனிலும் அந்தப் படைக்கு தனி ஜீப், தனி போன்நம்பர் கொடுக்கப்படும்.
அவசர போலீசுக்கு 100 மற்றும் தீயணைப்புத் துறைக்கு 101 என்பது போல், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரிடெலிபோன் நம்பர் அவசர பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தனி டெலிபோன் நம்பர் வழங்கப்படும்.
இந்த நம்பர் விரைவில் பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும் விளம்பரப் படுத்தப்படும். அதன்படி எந்நேரமும்இலவசமாக இந்த நம்பரில் அழைத்து பெண்கள் தங்கள் அவசரப் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
இத்திட்டத்தின்படி, முதல் அவசர பெண் போலீஸ் ஸ்டேஷன் நேற்று சேலத்தில் தொடங்கப் பட்டது. இதற்கு 1091என்ற டெலிபோன் நம்பரும் பெறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்படவிருக்கும் அவசர பெண் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இதே எண்ணையேபயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications