விமான நிலையத்தைத் தாக்க பஸ்சில் வந்த புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

செவ்வாய்க்கிழமை விடுதலை புலிகளின் தற்கொலை படையினரை விமானநிலையத்துக்கு அழைத்து வந்ததாக சந்தேகப்படும் 3 பேரை இலங்கை போலீசார்கைதுசெய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலை புலிகளின் தற்கொலை படையினர்பாதுகாப்பு அதிகம் உள்ள ராணுவ விமானத்தளத்தின் உள்ளே நுழைந்து ராணுவதளத்தின் மீதும், பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் மீதும் தாக்குதல்நடத்தினர்.

இதில் 14 விமானங்கள் சேதமடைந்தன. 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடுநாயகாவில் இருந்து திங்கள்கிழமை இரவு வந்த சொகுசு பேருந்தைஓட்டி வந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள்தான் புலிகளை விமான தளத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்றுபோலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த பேருந்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் கடுநாயாகாசர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள நேகாம்போ என்ற இடத்தில் வசித்துவருகிறார் என்று கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்த விமான நிலையத்தில் சொகுசு பேருந்து நின்று கொண்டிருந்ததுபோலீசாருக்கு சந்தேகத்தை கொடுத்தது.

இந்த சொகுசு பேருந்து குறித்தோ அல்லது சந்தேகப்படுமாறு நடந்த சம்பவம் குறித்தோமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் போலீசாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் சொகுசு பேருந்து அங்கு வந்ததை தான் பார்த்ததாக ஒருவர் கூறினார்.அவர் கூறுகையில், மடாரவில் இருந்து கொழும்பு செல்வதாக எழுதப்பட்டிருந்த ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட இந்த சொகுசு பேருந்து திங்கள்கிழமை இரவு குரானாசந்திப்புக்கு அருகே வந்து நின்றாது. அதில் இருந்து 3 மூட்டைகள் இறக்கப்பட்டன.

ராணுவ சீரூடையில் இருந்த 20 இளைஞர்கள் (புலிகள்) அந்த பேருந்தில் இருந்துஇறங்கி குரானாா ரயில் பாதை நோக்கி சென்றனர் என்றார்.

இந்த பஸ் மூலம் தான் விடுதலைப் புலிகள் விமான நிலையம் அருகே வந்திருக்கவேண்டும் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

தற்போது போலீசார் கைது செய்திருக்கும் 3 பேரும் புலிகளுக்கு உதவி இருக்கக்கூடும்என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவிக்கையில்,செவ்வாய்க்கிழமை விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைராணுவம், விமானப் படையினருக்கும் நடந்த சண்டையில் விமானப்படையைச்சேர்ந்த 6 பேரும், ஒரு பாதுகாப்புப்படை வீரரும் கொல்லப்பட்டனர். இறந்து போன 13புலிகளின் உடல்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+