சிவாஜியின் அஸ்தி காசி, குமரியில் கரைக்கப்படும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவாஜியின் அஸ்தி ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படும் என்று அவரது மகனும்நடிகருமான பிரபு கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரபு கூறியதாவது,
நடிகர் திலகத்தின் அஸ்தி காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கரைக்கப்படவுள்ளது.
5-ந் தேதி காரியங்கள் முடிந்ததும் அஸ்தி கரைக்கப்படும். குமரிக்கடலில் அஸ்தியைக் கரைக்க அரசிடம் அனுமதிகேட்டுள்ளோம்.
நெல்லையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் அஸ்தி, நாகர்கோவிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காகவைக்கப்படும். பின்னர் நான் அஸ்தியைக் கடலில் கரைப்பேன். காசியில் கங்கை ஆற்றில் அண்ணன் ராம்குமார்கரைப்பார்.
ராமேஸ்வரத்தில் எனது சித்தப்பா சண்முகத்தின் மகன் கிரி கரைப்பார்.












Click it and Unblock the Notifications