பாதாள சாக்கடை வழியே ஊடுறுவிய புலிகள்
கொழும்பு:
பலத்த ராணுவ பாதுகாப்பில் இருக்கும் கடுநாயகே ராணுவ விமானத்தளத்துக்குள்பாதாள சாக்கடை வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
ராணுவம், போலீசார், கண்காணிப்பு கேமராக்கள், ரோந்து வாகனங்களையும் மீறிபுலிகள் எப்படி உள்ளே நுழைந்தனர் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்இல்லை. அரசும், ராணுவமும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
அவர்கள் கடுநாயகே விமானத் தளத்தின் கழிவு நீர் செல்லும் கால்வழியாகத்தான்விமானத்தளத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று உளவுத்துறையினர்கருதுகின்றனர்.
கடுநாயகே விமானத்தளத்தின் கழிவுநீர் கால்வாய், விமான நிலையத்தை இணைக்கும்நெடுஞ்சாலையில் கீழே உள்ளது.
இந்த கழிவுநீர் செல்லும் கால்வாய் சில காலமாக பயன்படுத்தப்படாமால் இருந்தது.விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் அதன் வழியே தவழ்ந்து வந்து தான்விமானத் தளத்திற்கும், சர்வ தேசவிமான நிலையத்திற்குள்ளும் நுழைந்திருக்கவேண்டும் என உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த கழிவுநீர் செல்லும் கால்வாயின் உள்ளே இறங்கி பல மணி நேரம் தவழ்தே முன்னேறி வந்துவிமானத்தளத்தை அடைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விமானத்தள தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை புலிகள் பொறுப்புஏற்றுள்ளனர். இது குறித்து விடுதலை புலிகளின் வாய்ஸ் ஆஃப் டைகர்ஸ் வானொலிகூறுகையில், எங்கள் வீரர்கள் விமான நிலைய தாக்குதலை வெற்றிகரமாக செய்துமுடித்து உள்ளனர். ராணுவத்திற்கு சொந்தமான 8 விமானங்களை அழித்துள்ளனர் என்றுதெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications