பொய் வழக்குகள் போடுகிறார் ஜெயா: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
சுதாகரன் கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின்மூலம் அ.தி.மு.க. அரசு எவ்வாறு பொய் வழக்குகள் போடுகிறது என்ற உண்மைவெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில் சலாவுதினின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் இரண்டு செயலாளர்களுடனும், போதைப்பொருள் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுடன் தன் கணவர் தொலை பேசிமூலம் நடத்திய பேச்சுவார்த்தையை ஒலிப்பதிவு செய்து அந்த கேசட்டையும்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
தன் கணவர் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானைவை என ஜெயலலிதாவின்செயலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ள உண்மை கேசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறி உள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் கருத்தை செவ்வாய்க்கிழமை நிருபர்கள்கேட்டனர். அப்போது கருணாநிதி கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் சலாவுதினின் மனைவி தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க அரசுஎவ்வாறு பொய் வழக்குகள் போடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
இந்த மனுவுடன் வழக்கு பொய் வழக்கு என்பதற்கு ஆதாரமாக கேசட்டுகளும்சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து நான் ஆங்கில நாளிதழில் வந்த செய்திமூலம்தான் தெரிந்து கொண்டேன்.
அந்த செய்தி மர்ம நாவலை படிப்பது போல் இருந்தது. சலாவுதீனின் உயிருக்கும்,அவரது சகோதரர் மொய்தீனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உரியவர்கள்தான் அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என்றார் கருணாநிதி.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications