For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளைக்காரி

By Super
Google Oneindia Tamil News

டெல்லி:

வறுமை, தொடர் கற்பழிப்புகள், குழந்தையாக இருந்தபோதே திருமணம், மேல் ஜாதியினர் கொடுமை,துப்பாக்கிகள், 11 ஆண்டு சிறை என ஒரு பெண் வாழ்வில் அனுபவிக்க முடியாத, கூடாத கொடுமைகளை எல்லாம்அனுபவித்தவர் பூலன் தேவி.

1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர் பூலன்தேவி. ஏழைத் தலித் குடும்பத்தில் பிறந்தஇவர். குழந்தையாக இருந்தபோதே வயதில் மூத்த நபருக்கு திருமணம் முடிக்கப்பட்டார். வயதில் மூத்த அந்த நபர்கணவர் என்ற பெயரில் சிறுமியாக இருந்த பூலானை கற்பழித்துக் கொடுமைப்படுத்தி வந்தார்.

இதனால் ஆண் வர்க்கத்தின் மீதே பூலன்தேவிக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் தான் வாழ்ந்த அந்த கிராமத்தில்தலித்களை உயர் ஜாதியினர் கொடுமைப்படுத்துவதையும் கண்டு வெறுப்படைந்திருந்தார்.

இதனால் சம்பல் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த கொள்ளைக் கூட்டத்தில் போய் சேர்ந்தார். முற்பட்டஜாதியினரால் தலித்கள் கொடுமைக்குள்ளாவதையும் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். அந்தக் கொள்ளைக்கும்பலில் இருந்தவர்களாலும் பூலன் பலமுறை கற்பழிக்கப்பட்டார். ஒரே நாளில் தொடர்ந்து பலமுறைகற்பழிப்புகளுக்கும் ஆளானார்.

இதையடுத்து தானே ஒரு கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவியாகி தன்னை கற்பழித்தவர்கள் உள்பட பலரையும் பழிவாங்கினார்.

இவரது தலைமையிலான கும்பல் பல்வேறு கொலைகளில் ஈடுபட்டது. குறிப்பாக தலித்களுக்கு எதிராக செயல்பட்டஉயர் ஜாதியினரை இவர்கள் கொன்று குவித்தனர்.

இவர் மீது 22 கொலை வழக்குகள் உள்பட 55 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அரசிடம் சரணடைந்தால் மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட ஒரு வழியாய் 1983ம் ஆண்டு பிப்ரவரிமாதம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசிடம் சரணடைந்தார் பூலன்தேவி. அப்போதைய மத்தியப் பிரதேசஅர்ஜூன் சிங்கிடம் இவர் சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் 1994ம் ஆண்டு பிப்ரவரியில் விடுவிக்கப்பட்டார். இவரைவிடுவித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் அப்போதைய உத்தரப் பிரதேசமுதல்வருமான முலாயம் சிங் யாதவ்.

விடுதலையானவுடன் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அவரை தேர்தலில் நிறுத்தி எம்.பியும் ஆக்கினார் முலாயம்சிங். விடுதலையான ஆண்டிலேயே உத்தரப் பிரதேச எம்.எல்.ஏவான உமத் சிங்கை திருமணம் செய்து கொண்டார்பூலன்.

இரண்டாவது முறையும் தேர்தலில் நின்று எம்.பி. ஆனார் பூலன்தேவி. தன்னை விடுவித்த முலாயம் சிங்குக்கு கடைசிவரை ஆதரவாக இருந்து வந்தார். நாடாளுமன்ற விவாதங்களிலும் மிகக் தீவிரமாகப் பங்கேற்றார்.

இவரது தொகுதியான மிர்ஸாபூரில் ஏற்பட்ட அரசியல் சண்டை காரணமாகவோ, அல்லது இவரால் கொல்லப்பட்டஉயர் ஜாதியைச் சேர்ந்த குடும்பத்தினராலோ இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

பூலன் தேவியின் வாழ்க்கை வரலாறு தான் பாண்டிட் குயீன் என்ற பெயரில் திரைப்படமாக வெளி வந்தது. சேகர்கபூர் இயக்கிய இந்தப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X