சொத்தை அமைச்சரவை.. 25 லட்சம் இன்சூரன்ஸ் சாத்தியமா? தவெக ஆட்சி நீடிக்காது: அய்யநாதன் அட்டாக்
சென்னை: விஜய் அமைச்சரவை, மொத்தமும் சொத்தை.. சொத்தைகளால் ஆன புதிய மந்திரி சபையாக இருக்கும்.. அங்கே யாருக்கும் எந்த அனுபவமும் கிடையாது.. ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், என அமைச்சரவை தமாஷாக இருக்க போகிறது.. அம்புலிமாமா படிக்கிறது போல இருக்கும் அமைச்சரவை" என்று மூத்த அரசியல் விமர்சகர் கடுமையாக அய்யநாதன் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள பல்வேறு வாக்குறுதிகள் சமீப நாட்களாகவே பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.. குறிப்பாக அந்த கட்சிக்கு ஒரு தெளிவான பார்வை இல்லை என்றும், வெறும் பதவியை நோக்கியே விஜய் ஓடுகிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன..

விசிக ஆதவ் அர்ஜுனா
இதற்கு முன்பு விசிக தொடர்பாக ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்களும், தற்போது அவர்களுடன் நிலவும் உறவும் நிரந்தரமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.. விசிகவில் வெறும் 20 பேர் தான் இருக்கிறார்கள் என்று சொன்ன அதே ஆதவ் அர்ஜுனா தான் தற்போது அவர்களுடன் நெருக்கம் காட்டுகிறார்.. இது ஒரு நிலையான உறவுக்கான அடிப்படையாகத் தெரியவில்லை.. அதேபோல விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என்ற கருத்தும் வலுவாக உள்ளது..
இந்நிலையில், Tamil niram என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் அய்யநாதன், "தவெக ஆட்சி நிலைக்காது.. எப்படி நிலைக்கும்? அந்த கட்சிக்கு தெளிவான பார்வை இல்லை.. சரியான ஆதரவும் இல்லை..
விஜய்க்கு புரிதல் இல்லை
இதே ஆதவ் அர்ஜுனா அன்று விடுதலை சிறுத்தைகளை பார்த்து என்ன சொன்னார்? விசிகவில் வெறும் 20 பேர் இருக்கிறார்கள் என்று சொன்னாரா? இல்லையா? இப்போ 2 எம்எல்ஏக்கள் வந்ததும், அந்த ஆதரவி கடிதத்தை அவர்களே தருகிறார்கள், இவரும் வாங்கி கொள்கிறார். இதெல்லாம் நிர்ந்தரமான உறவுக்கான அடிப்படையா?
விஜய்யிடம் எங்காவது நிலையான உறுதி உள்ளதா? புரிதல் இல்லை, தெளிதல் இல்லை.. பதவி என்பதை நோக்கி மட்டுமே ஓடுகிறார்.. இவங்களும் அவருக்கு சப்போர்ட் செய்கிறார்கள். சீன் போடுறதுதான் நடக்கிறது..
25 லட்சம் இன்சூரன்ஸ்
விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற போவதில்லை.. உலக வங்கியில் இருந்து வருடத்திற்கு 50 லட்சம் வாங்கினால்தான் சாத்தியம்.. இங்குள்ள பட்ஜெட்டை வைத்து அதையெல்லாம் நிறைவேற்ற முடியாது.. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 லட்சம் இன்சூரன்ஸ் செய்ய போகிறார். இதற்கு வருடத்துக்கு 60 ஆயிரம் பிரீமியம் கட்டணும்.. அப்படியென்றால் 2500 ரூபாய்.. எங்கே போவது?
அதேபோல தமிழ்நாட்டில் எல்லாரும் பஸ்ஸில் இலவசமாக பயணம் போகப்போறாங்க.. அப்போ எப்படி பஸ்ஸுக்கு டீசல் போடுவது? புது பஸ்களை எப்படி வாங்குறது? உலக வங்கியில் கடன் வாங்கினால்தான் இதெல்லாம் சாத்தியம்.. எப்படியும் ஜெயிக்க போவதில்லை என்று தெரிந்து சும்மா தேர்தல் அறிக்கையில் அள்ளி விட்டார் விஜய்.. இப்போ பதவியேற்றதும இன்ஷூரன்ஸ் பற்றி யாராவது அவரிடம் கேளுங்கள்
விஜய்யின் தலைமையில் தவெக அமைச்சரவை மொத்தமும் சொத்தை.. சொத்தைகளால் ஆன புதிய மந்திரி சபையை அமைப்பார்.. அங்கே யாருக்கும் எந்த அனுபவமும் கிடையாது.. ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், என தமாஷாக இருக்க போகிறது.. அம்புலிமாமா படிக்கிறது போல இருக்கும் அமைச்சரவை" என்று விமர்சித்துள்ளார்.
-
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications