ஆளுநரை பார்த்துவிட்டு வரும்போது விஜய் முகத்தில் அவ்ளோ சந்தோஷம்.. கரை புரண்ட உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 4 ஆம் தேதி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால் அதன் பிறகு விஜய் ஒவ்வொரு முறையும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வரும் போது கடும் அப்செட்டில் வந்ததையே பார்க்க முடிந்தது. ஆனால் இன்றோ ஆளுநரை பார்த்துவிட்டு வரும் போது விஜய் முகத்தில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சி, பெரும் உற்சாகம் காணப்பட்டது.

காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த விஜய், ஆளுநர் மாளிகை முன்பாக திரண்டு இருந்தவர்களை பார்த்து உற்சாகத்துடன் கை கூப்பி வணக்கம் வைத்தார். பின்னர் வழிநெடுக மக்கள் வெள்ளத்திற்கு நடுவே விஜய்யின் கார் மெதுவாக ஊரந்து சென்றது. அனைவரும் விஜய்யை உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

Vijay Walks Out of Raj Bhavan With a Big Smile - From Disappointment to Delight

பரபரப்பாக இருந்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் முடிந்த நாளில் இருந்தே ஒரே டென்ஷனும் பரபரப்புமாக காணப்பட்டார். தனிப்பெரும்பான்மை அவருக்கு கிடைக்காததால், மேஜிக் எண்ணான 118 ஐ எட்ட விஜய் கடும் முயற்சி மேற்கொண்டார்.

காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த போதிலும் தீவிர முயற்சிக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதன்பிறகு ஒரு நாளுக்கும் மேலாக தீவிர ஆலோசனை செய்து வந்த திருமாவளவன் விஜய்க்கு இன்று மாலை 4 மணியளவில்தான் ஆதரவு கொடுத்தார். மே 4 ஆம் தேதியில் இருந்து இன்று வரை சரியாக 5 நாட்களும் விஜய், பெரும் பரபரப்புடனேயே காணப்பட்டார்.

தேர்தல் ரிசல்ட் அன்று

தேர்தல் ரிசல்ட் நாளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டதும் விஜய் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தது அவரது கண்ணில் தெரிந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும் தன் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபாவை வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் நேரடியாக தான் கல்லூரி படிப்பை படித்த நுங்கம்பாக்கம் கல்லூரிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.

அங்கிருந்து வெளியில் வரும்போது விஜய் மிகுந்த உற்சாகத்துடன் கண்ணில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி தெரிந்தது என்றே சொல்லலாம். வெற்றி சான்றிதழை உயர்த்தி பிடித்தப்படி மக்களை நோக்கி புன்னகைத்தப்படியே வருகை தந்தார். அப்போது விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்புகள் வழங்கப்பட்டன. வழிநெடுகிலும் இருந்த மக்களை பார்த்தை புன்னகையுடன் கையசைத்தப்படியே சென்றார்.

அழைப்பு விடுக்காத ஆளுநர்

அதன் பிறகு பெரும்பான்மை கிடைக்காததாலும், ஆளுநர் அழைப்பு விடுக்காததாலும் விஜய் அப்படியே அமைதியாகிவிட்டார். ஒரு கட்டத்தில் ஆட்சி அமைக்க முடியுமா? என்ற சந்தேகம் கூட விஜய்க்கு வந்துவிட்டது. அரசியல் வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் கொடி கட்டி பறந்ததன. அதிமுக- திமுக கூட்டணி, பொது வேட்பாளராக ஒருவரை முதல்வருக்கு முன்மொழிய இரு கட்சிகளும் திட்டம் என்றெல்லாம் தகவல்கள் பரவின.

இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற பழமொழிக்கு ஏற்ப விஜய்யின் தவெக கடந்த சில தினங்களாக ஒரே சந்திப்புகள், ஆலோசனைகள் என பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. ஆளுநரை மூன்று முறை விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான நம்பர்களோடு வாருங்கள்.. அடுத்த நொடியே ஆர்டரை தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் ஆளுநர் அர்லேகர்..

விஜய் முகத்தில் பெரும் உற்சாகம்

இதனால், விஜய் ஒவ்வொரு முறையும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வரும் போது கடும் அப்செட்டில் வந்ததையே பார்க்க முடிந்தது. காரில் இருந்த லைட்டும் ஆஃப் ஆகி இருக்கும். ஆனால் இன்றோ ஆளுநரை பார்த்துவிட்டு வரும் போது விஜய் முகத்தில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த விஜய், ஆளுநர் மாளிகை முன்பாக திரண்டு இருந்தவர்களை பார்த்து உற்சாகத்துடன் கை கூப்பி வணக்கம் வைத்தார்.

பின்னர் வழிநெடுக விஜய்யை பார்க்க தொண்டர்கள் குவிந்தனர். மக்கள் வெள்ளத்திற்கு நடுவே விஜய்யின் கார் மெதுவாக ஊரந்து சென்றது. அனைவரும் விஜய்யை உற்சாகம் பொங்க வரவேற்றனர். கடந்த 4 நாட்களாக திக் திக் மனநிலையுடன் கடந்த தவெகவினருக்கு இன்றும் பெரும் நிம்மதியை ஆளுநரின் உத்தரவு கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+