கூடங்குளம் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா கடனுதவி
கூடங்குளம்:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் அணுசக்திநிலையம் அமைக்க ரஷ்யா ரூ.1400 கோடி கடன்அளிக்க முன்வந்துள்ளது.
விவாதத்தில் இந்திய அணுசக்திக் கழக (என்.பி.சி.) விஞ்ஞானிகளும், ரஷ்யாவிலிருந்து அணுசக்தித்துறை துணைஅமைச்சர் ரெஷெட்நிகோவ் தலையில் வந்துள்ள குழுவும் கலந்து கொண்டது.
இதுபற்றி என்.பி.சி. தலைவர் சதுர்வேதி கூறியதாவது,
இத் திட்டத்தின் கீழ் 1,000 மெகாவாட் சக்தி தரக்கூடிய 2 பவர் பிளாண்ட்கள் அமைக்கப்படும். மொத்த செலவை700 கோடியிலிருந்து 660 கோடியாக குறைக்க முயற்சித்து வருகிறோம். ரஷ்யாவுடன் இதுபற்றிய பேச்சுவார்த்தைகிட்டத் தட்ட முடிந்துவிட்டது.
இறுதி முடிவு எடுப்பது பற்றியும், செலவைக் குறைப்பது பற்றியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் பேசி முடிவெடுக்கப்படும்.
ரஷ்யா வழங்கியிருக்கும் இந்தக் கடனை 4 சதவீத வட்டியுடன் 14 தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கூடங்குளத்தில் உற்பத்தி துவங்கியவுடன், ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 3.50லிருந்து ரூ. 3.75க்கு மின்துறைக்குவிற்கப்படும். இத்திட்டத்தின் 90 சதவீத தொழில் நுட்பம் ரஷ்யாவினுடையது, எஞ்சிய 10 சதம் தான்இந்தியாவினுடையது.
கட்டுமானப் பணிக்கு போதுமான நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும்மின்சாரம் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படும்.
இந்தியாவில் மொத்தம் 14 அணுசக்தி மையங்கள் உள்ளன. அவற்றில் 12 மையங்களில் கடின நீர்பயன்படுத்தப்படுகிறது. இலேசான நீர் பயன்படுத்தும் மையங்களில் இதுவும் ஒன்று. இவ்வாறு சதுர்வேதி கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications