நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார் ரங்கநாதன்
சென்னை:
6வழக்குகள் தொடர்பாக 54 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த த.மா.கா. ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது.
6 வழக்குகளில் 4 வழக்குகளில் இவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்திருந்தது.
இந்நிலையில் திரு.வி.க.நகரைச் சேர்ந்த உ.ஷாராணி என்ற பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகதொடரப்பட்ட வழக்கிலும், செம்பியம் திருமூர்த்தி நிலத்தகராறு வழக்கிலும் ரங்கநாதனுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரங்கநாதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் ரங்கநாதனுக்கு ரூ 10,000 சொந்தஜாமினிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் ரங்கநாதன் திருச்சியில் தங்கி இருக்க வேண்டும். தினமும் ஜுடிஷியல் நீதிமன்றத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும். விடுமுறை நாட்களில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்என்று நிபந்தனை விதித்தார்.
ரங்கநாதன் மீது தொடரப்பட்டு இருந்த 4 வழக்குகளில் அவருக்கு முன்னரே நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுஉள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் கிடைத்து இருப்பதை அடுத்து 54 நாட்கள்சிறைவாசத்திற்கு பிறகு ரங்கநாதன் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications