சுதாகரன் கைது: உண்மை காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதரகரன் கைது செய்யப்பட்ட வழக்கில் உண்மையில் நடந்தது என்ன என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் பணமும், நகைகளும் சுதாகரனால் திருடப்பட்டதாம்.

சலாகுதீன் என்பவர் சுதாகரனின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபரும் ஆவார். இவர் சென்னையில் இந்தியா-ஜெர்மன் கம்பெனி மற்றும் சிலிகான் வேலிபிராக்ரஸ் வெர்க் பி லிட் போன்ற இன்ஜினியரிங் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா ஜெயிலிலிருந்து வந்தவுடன் சலாகுதீனை அழைத்து, தன் வீட்டில் திருடப் பட்ட பணம் மற்றும் நகைகளை சுதாகரன் என்ன செய்தார் அவற்றைஎங்கு வைத்துள்ளார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சலாகுதீன், அதுபற்றித் தமக்குத் தெரியாது என்றும் அவருக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் சொல்லி விட்டார்.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா தான் மீண்டும் முதல்வரானவுடன், தனது பணம் மற்றும் நகைகளைப் பற்றிய உண்மையை அறிய முடிவு செய்தார்.

அதன்படி, சுதாகரனின் நண்பர் கோபு ஸ்ரீதர் என்பவர் மூலமே சுதாகரன் மீது புகார் கொடுக்கப்பட்டது. சுதாகரன், அவரது நண்பர் சலாகுதீன், சலாகுதீனின்தம்பி மொய்தீன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக புகார் கொடுத்தார் கோபு.

சுதாகரன் தன்னை சின்ன எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொண்டு ஒரு மன்றமும் நடத்தி வந்தது அனைவரும் அறிந்தது. இதில் சுதாகரனுக்கு உதவியாளராகஇருந்தவர்தான் இந்த கோபு ஸ்ரீதர்.

கோபு தந்த புகாரின் அடிப்படையிலும், மேலும் வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப் பட்டு போலீசார் சுதாகரனைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சலாகுதீன் தலைமறைவாகி விட்டார். அவரது தம்பி மொய்தீன் மட்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில், சலாகுதீன் மனைவி சுப்ரீம் கோர்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

என் கணவரும், மொய்தீனும், சுதாகரனுடன் சேர்ந்து அவரது உதவியாளரைத் தாக்கியதாகவும், வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் பொய்வழக்குப் போட்டுள்ளனர்.

1991-ம் ஆண்டு என் கணவர் சலாகுதீன், ஜெ.ஜெ. டிவி நிறுவனத்திற்கு தொழில் ரீதியாக உதவிகள் வழங்கி வந்தார். அப்போது ஜெ.ஜெ. டிவி மூடப்பட்டபிறகு என் கணவருக்கும், சுதாகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

கடந்த 1997-ம் ஆண்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, என் கணவரை அழைத்து, "நான் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த போதுசுதாகரன் எனது வீட்டில் இருந்த கோடிக்கணக்கான பணத்தையும், நகைகளையும் எடுத்துச் சென்று விட்டார். அதுபற்றி உங்களுக்குத் தெரியுமா? " என்றுகேட்டுள்ளார்.

அதற்கு சலாகுதீன் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். அப்போது ஆட்சியில் இல்லாததால்விட்டுவிட்டார்.

ஆனால், இப்போது அதிகாரத்துக்கு வந்தவுடன் பழிவாங்கத்தான், இப்போது எனது கணவர் மீதும், அவரது தம்பிமொய்தீன் மீதும் பொய் வழக்குப் போடப் பட்டுள்ளது.

வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்பு சலாகுதீன் முதல்வரின் துணைச் செயலாளர்கள் நடராஜன் மற்றும்சந்திரமோகன் ஆகியோருடன் பேசியுள்ளார்.

அப்போது நடராஜன், அந்த நகை மற்றும் பணம் எங்கு இருக்கிறது என்று சொல்லி விட்டால் எங்களைக் கைதுசெய்யமாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கான டேப் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

எனவே எனது கணவர் மற்றும் அவரின் தம்பி மொய்தீன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும்இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டேப் செய்யப்பட்ட டெலிபோன் உரையாடல்

அந்த டேப்பில், முதல்வரின் துணைச் செயலாளர் நடராஜன், சலாகுதீனிடம் நகைகள், பணம் குறித்து உங்களிடம்என்ன தகவல் உள்ளது என்று கேட்கிறார்.

அதற்கு சலாகுதீன், தோட்டத்திலிருந்து எடுத்த பணத்தில் 15 கோடியை தினகரனுக்கும், 10 கோடியைபாஸ்கரனுக்கும், 5 கோடியை மகாதேவனுக்கும் கொடுத்துள்ளார் சுதாகரன்.

அவருடைய மாமா நடராஜனுக்கும் 15 கோடி கொடுத்துள்ளார்.

மீதமுள்ள 20 கோடியை தனது மன்ற விளம்பரத்திற்கு செலவளித்துள்ளார். இவ்வாறு சலாகுதீன் அந்த டேப்பில்கூறுகிறார்.

மேலும், தோட்டத்திலிருந்து எடுக்கப் பட்ட நகைகள் எங்கு புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்று நடராஜன் கேட்க,சலாகுதீன் எந்த நகை? என்று கேட்கிறார்.

இதனால், கோபமடைந்த துணைச் செயலாளர் நடராஜன், இதற்கு மேல் ஒன்றும் சொல்ல மாட்டீர்கள். சரி, பணம்எவ்வளவு ரெடி பண்ணியிருக்கிறீர்கள் என்கிறார். அதற்கு சலாகுதீன், தயக்கத்துடன் 10 லட்சம் என்கிறார்.

இவ்வாறு அந்த 2 பேரும் பேசிக் கொண்டது டேப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தன் நகைகளையும் பணத்தையும் திருடியதற்காகத் தான் சுதாகரன் மீதும், அவரின் நண்பர்கள் சலாகுதீன் மற்றும்மொய்தீன் ஆகியோர் மீதும் ஜெயலலிதா வழக்குகள் போட்டு சிறையில் அடைத்திருப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+