சிவாஜி வீட்டில் துக்கம் விசாரித்தார் சுதாகரன்
சென்னை:
இடைக்கால ஜாமீனில் விடுதலை ஆன முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிவாஜிகணேசன் வீட்டிற்கு சென்று அனைவரிடமும் துக்கம் விசாரித்தார்.
இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியான சத்தியலட்சுமியின் கணவர்.சிவாஜிகணேசன் சனிக்கிழமைஇறந்ததை அடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சுதகாரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம், சுதாகரனுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 3நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீனில் இருக்கும் காலத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டிஅளிக்கக்கூடாது, நண்பர்களுடன் வெளியே செல்லக்கூடாது மற்றும் மன்ற உறுப்பினர்களை சந்திக்கக் கூடாதுஎன்று நிபந்தனை விதித்தார் நீதிபதி.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறையிலிருந்து சுதாகரன் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவர்சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின் சுதாகரன் தரப்புவக்கீல் திங்கள்கிழமை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் உத்தரவையும், ஜாமீன் பத்திரத்தையும் நீதிமன்றத்தில்சமர்பித்தார்.
ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் சுதாகரன் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சுதாகரன் பத்திரிக்கையாளர்கள் யாரிடமும் எதுவும் பேசாமல், தனக்குகொண்டுவரப்பட்ட டொயோட்டோ காரில் ஏறி சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கும் ஒரு வழக்குதொடர்பாக ஜாமீன் பத்திரத்தை செலுத்தியபின், நேராக நடிகர் சிவாஜியின் வீட்டிற்கு சென்றார்.
சுதாகரனைப் பார்த்த நடிகர் பிரபு, சுதாகரனின் மனைவி சத்தியலட்சுமி உள்பட சிவாஜியின் குடும்பத்தினர்அனைவரும் கதறி அழுதனர். காரில் இருந்து இறங்கிய சுதாகரனை கட்டிப்பிடித்து அழுத பிரபு, அவரைக்கட்டிப்பிடித்தபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
சிவாஜியின் மனைவி கமலம்மாளைப் பார்த்த சுதாகரன் சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுதார். சுமார் 45நிமிடம் அங்கு இருந்த சுதாகரன் பின்னர் அங்கிருந்து புறுப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications