துரோகம் செய்தார் ஜெயா: ராமதாஸ் புகார்
டெல்லி:
அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியதற்கு காரணம் ஜெயலலிதா செய்த நம்பிக்கை துரோகம்தான் காரணம்என அதன் தலைவர் ராம்தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தது குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது,
அதிமுக கூட்டணியில் இருந்த போது ஜெயலலிதாவுடன் ஒத்துப்போவது கடினமான ஒன்றாக இருந்தது.
இப்போது பா.ம.க.மீண்டும் தே.ஜ.கூட்டணிக்கு இணைந்ததற்கு ஜெயலலிதாவின் அராஜகப் போக்கும் ஒருகாரணம்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
இதன்மூலம் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், பாண்டிச்சேரியிலும் ஆட்சியில்பங்குபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருந்தோம்.
ஆனால் ஜெயலலிதா எங்களைக் கேட்காமல் காங்கிரஸ், த.மா.கா., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்பாண்டிச்சேரியில் ரகசிய உறவை ஏற்படுத்திக் கொண்டாா. இதனால் பாண்டிச்சேரியில் எங்களுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.
இதைவிட நம்பிக்கை துரோகம் ஏதும் உண்டா?
பாண்டிச்சேரியில் நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதா இவ்வாறு செய்தார்.
மேலும் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டபோது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக சொல்லிவிட்டு பிறகு அதையும்கொடுக்க மறுத்துவிட்டார்.
இவ்வாறு ஜெயலலிதா அரசியல் நெறி தவறி எங்கள் கட்சிக்கு வஞ்சகம் செய்ததால், நாங்கள் அங்கிருந்து விலகி,வாஜ்பாய் தலையில் செயல்படும் நாணயமான கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இவ்வாறு ராம்தாஸ் கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications