நடுக்கடலில் தவித்த 11 தமிழ் அகதிகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

ராமேசுவரம்:

இலங்கையிலிருந்து வந்த 11 தமிழ் அகதிகள், வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, இந்தியக்கடற்படை அவர்களை மீட்டது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டையால் பாதிக்கப்படும்தமிழ் மக்கள், இந்தியாவுக்கு அகதிகளாக வந்து கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்காக, ராமேசுவரம் அருகில்உள்ள மண்டபத்தில் அகதிகள் முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து வரும் பெரும்பாலான அகதிகள்இங்குதான் தங்கவைக்கப்படுவார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் 11 தமிழ் அகதிகள் தலைமன்னாரிலிருந்து ஒரு படகின் மூலம் புறப்பட்டனர். படகுக்கட்டணமாக ரூ.10 ஆயிரத்தை இவர்கள் படகுக் காரர்களுக்குக் கொடுத்தனர்.

அரிச்சமுனை அருகே படகு வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இந்தியக் கடலோர ரோந்துப்படையினரைக் கண்டதும் படகுக் காரர்கள் பயந்து போனார்கள். அருகிலுள்ள ஒரு மணல் திட்டில் அகதிகளைஇறக்கி விட்டு, "இதுதான் தனுஷ்கோடி" என்று கூறிவிட்டு, படகை மீண்டும் திருப்பிக் கொண்டு போய்விட்டனர்.

அந்த இடம் தனுஷ்கோடி அல்ல என்பது, அதற்குப் பிறகுதான் அகதிகளுக்குத் தெரிந்தது. உணவு, தண்ணீர்இல்லாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த வழியாக வந்த இந்தியக் கடற்படையினர், 11 அகதிகளையும் மீட்டு, ராமேசுவரம் கொண்டுவந்து சேர்த்தனர். ராமேசுவரம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட 11 பேரையும் கடுமையாகச் சோதித்துப் பார்த்தபோலீசார், பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த 11 அகதிகளில், 4 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+