பா.ம.கவிற்கு திருமாவளவன் நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையும் பா.ம.கவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் நிபந்தனை விதித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தக் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுப்பது பற்றி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

ஆரம்பத்திலிருந்தே பா.ம.கவை எதிர்த்து அரசியல் நடத்தி வருபவர் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன்.

இவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தே.ஜ. முன்னணியில் பா.ம.க. சேரும் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். எங்களுக்கு தே.ஜ கூட்டணியின்தலைவர் வாஜ்பாயுடனோ, அதன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டசுடனோ நேரடித் தொடர்பு இல்லை.

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை வகிப்பது திமுக தான். எனவே, பா.ம.க. குறித்து திமுகவின்நிலை என்ன என்பதைப் பொறுத்தே நாங்கள் முடிவெடுப்போம்.

கதர் சட்டை போடாதவரை காங்கிரசில் சேர்க்கமாட்டோம் என்று காந்தி கூறினார். அதைப் போல, குடிசையைக்கொளுத்துபவரை பா.ம.கவில் சேர்க்க மாட்டேன் என்று ராமதாஸ் உறுதிமொழி கொடுத்தால் நாங்கள் கூட்டணியில்நீடிப்போம் என்று கூறினார் திருமாவளவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+