சென்னையில் டிராபிக் நெரிசலைத் தவிர்க்க நவீன சாதனங்கள்
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்கபடுத்தவும் தீவிர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் தெரிவித்தார்.
அண்ணாசாலை, அண்ணாநகர், தியாகராயர்நகர் போன்ற இடங்கள் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல்மிகுந்த பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கபடுத்த பல நவீன சாதனங்களோடு புதியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது பற்றி சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறியதாவது:
சென்னையின் முக்கிய சாலைகளில் சாலைத் தடுப்பான், தற்காலிக வேகத்தடை போன்றவை பயன்படுத்தப்படும்.நோ பார்க்கிங் ஏரியாவைப் பிரித்துக் காட்ட ரப்பராலான ஒளிரும் தன்மை கொண்ட கூம்புகளும்பயன்படுத்தப்படும்.
மேலும், குடித்து விட்டு ஓட்டுபவர்களைக் கண்டுபிடிக்க நுகரும் சாதனம், அதிவேகமாகவும் இடித்துக் கொண்டும்செல்பவர்களைக் கண்டறியும் சாதனம் மற்றும் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு முதலுதவிப் பெட்டி ஆகியவையும்வாங்கப்பட்டுள்ளன.
இவையனைத்தும் ஒரு இரு சக்கர வண்டியில் (டூவீலர்) பொருத்தப்பட்டு, சென்னை முழுவதும் வலம் வரும்.இதற்காக ஹீரோ ஹோண்டா நிறுவனம் 2 பைக்குகளை இலவசமாக வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம்மதிப்புடையது. இவை இரண்டும் இதற்காகவே தயாரிக்கப் பட்ட சி.பி.இஸட் வகை பைக்குகள்.
நெரிசல் மிகுந்த அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், தி.நகர், அமிஞ்சிக்கரை போன்ற இடங்களில்இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்படும். இதைப்பயன்படுத்தும் முறை குறித்து 140 பேருக்கு பயிற்சிஅளிக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் விதிகளை மீறுவோரைக் கட்டுப்படுத்த முடியும்.
சென்னையில் நடக்கும் விபத்துகளில் 70 சதம் பைக்குகளினால் தான் ஏற்படுகிறது. எனவே பைக்கில் செல்பவர்கள்ஹெல்மெட் அணிவது அவர்களின் உயிருக்கு நல்லது என்று அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications