30 சதவிகிதம் அரசு ஊழியர்கள் குறைப்பு: ஜெ. அதிரடி ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் விரைவில் 30 சதவிகித அரசு ஊழியர்கள் வீட்டுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏராளமான அரசு நிறுவனங்கள் நலிவடைந்த நிலையில் உள்ளன. இந்த நிறுவனங்களால் அரசுக்குஎந்தவிதமான வருவாயும் கிடைப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கக் கொடுக்கும் சம்பளமும் விரயம்தான் என்று கூறியஜெயலலிதா, இந்த நிறுவனங்களை மூடிவிட்டால் என்ன என்றும் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிறுவனங்களுக்கு மூடுவிழா செய்வதன் மூலம், 30 சதவிகிதம் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக்குறைக்கலாம். இவர்களுக்கு சென்று கொண்டிருக்கும் சம்பளப் பணமும் மீண்டும் கஜானாவில் சேருமே என்றநோக்கில்தான் ஜெயலலிதா இந்த அதிரடி ஆலோசனையைக் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெரும் புதுத் திட்டங்கள், குடிநீர்ப்பிரச்சனை, அரசின் செலவுகளைக்குறைக்கும் வழிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.
ஆண்டுதோறும் 5 லட்சம் பெண்களைத் தேர்வு செய்தல், பிறகு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்சிறு தொழில் பயிற்சியளித்தல், தமிழக அரசின் நிதிநிலைமையை மேம்படுத்துதல், அதற்காக அரசு ஊழியர்களுக்குஆகும் செலவைக் குறைத்தல், நலிந்த அரசு நிறுவனங்களை மூடுதல், அரசு அலுவலகங்களில் ஏற்படும்காலியிடங்களை நிரப்பாதிருத்தல் போன்றவற்றை செயல் படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும்அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications