பூலன்தேவி கொலை: 20 ஆண்டுக்கு முந்தைய ஜாதிக் கொலைகளுக்கு பழிக்குப் பழி

Subscribe to Oneindia Tamil

டேராடூன்:

20 ஆண்டுகளுக்கு முன் பூலன்தேவியால் உயர் ஜாதியைச் சேர்ந்த 21 டாகூர்கள் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே அவரைக் கொலை செய்ததாக ஷேர்சிங் ராணா என்ற பங்கஜ் கூறியுள்ளார்.

பிகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் ஜாதிக் கொலைகள் நடப்பது மிக சகஜம். உயர் ஜாதியினரும் ஒடுக்கப்பட்டஇனத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள தனித்தனியே துப்பாக்கி ஏந்திய படைகளை வைத்துக்கொண்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் டாகூர் ஜாதியைச் சேர்ந்த லாலா ராம் தலைமையிலானகொள்ளையர்கள் தலித்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.

உயர் ஜாதியினரால் கற்பழிக்கப்பட்ட பூலன்:

இந்தக் கூட்டத்தினர் தாழ்த்தப்பட்ட மீனவ இனத்தைச் சேர்ந்த பூலன்தேவியை கூட்டம் கூட்டமாக வந்துகற்பழித்தனர். ஒரே நாளில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டவர்களால் பூலன்தேவி கற்பழிக்கப்பட்டார்.இதையடுத்து தானே ஆயுதத்தை எடுத்த பூலன்தேவி கொள்ளைக்காரியாகவும் மாறினார்.

தன்னை உயர் ஜாதியினர் கற்பழித்ததற்கு பழி வாங்குவதற்காக டாகூர் ஜாதியைச் சேர்ந்த 21 பேரை சுட்டுக்கொன்றனர் பூலன்தேவியும் அவரது கூட்டாளிகளும்.

உத்தரப் பிரதேசத்தில் பிமாய் என்ற கிராமத்தில் 1981ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம்நடந்தது.

இந்தக் கொலைகளுக்கு பழிக்குப் பழி வாங்கவே பூலன் தேவியை இப்போது நான் சுட்டுக் கொன்றேன் என டாகூர்ஜாதியைச் சேர்ந்த ஷேர்சிங் ராணா தெரிவித்துள்ளார்.

போலீஸ் கமிஷ்னர் பேட்டி:

இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொலை நடந்த அன்று பூலன் தேவியைச் சந்திக்க அவரது வீட்டுக்கு வந்திருந்த விஜய்குமார் கஷ்யப் மற்றும்அவரது மனைவி உமா ஆகியோர் கொலை நடந்த உடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

உடனடியாக அவர்களைப் பிடித்து விசாரித்தோம். அப்போது தங்களை ஷேர்சிங் ராணா என்ற பங்கஜ் தான்டேராடூனில் இருந்து டெல்லிக்கு கரும்பச்சை நிற காரில் அழைத்து வந்ததாகக் கூறினர். கொலைத் திட்டம் குறித்துதங்களுக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்தனர்.

இந்தக் காரில் தான் ஷேர்சிங் ராணாவும் 2 கொலையாளிகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பினர் என்பதுவிசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த காரை ஓரிடத்தில் விட்டுவிட்டு அவர்கள் தப்பினர்.

ராணா டேராடூனைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு சென்று விசாரித்தோம். இதில் ஷேர்சிங் ராணாவுக்கு 2சகோதரர்கள், 1 சகோதரி இருப்பதும், அவர் மாணவர் யூனியன் போன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.

மடக்கி பிடித்த போலீஸ்:

அவரை மடக்கிப் பிடிக்க போலீஸ் படை தீவிரமாக இயங்கியது. இந் நிலையில் வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு டோராடூன் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு தான் பேட்டியளிக்கப் போவதாக அனைத்து பத்திரிக்கைஅலுவலகங்களுக்கும் ராணா தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு முற்றுகையிட்ட போலீஸ் படை 11 மணிக்கு அங்கு வந்த ராணாவை கைது செய்தது. அவரது 2கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ஒரு கூட்டாளியின் பெயர் ரவீந்தர் எனத் தெரியவந்துள்ளது.அவருக்கு ஹரிஹரில் ஒரு ஒயின்ஷாப் உள்ளது. இந்த ஒயின்ஷாப்பில் ராணாவும் ஒரு பார்ட்டனர். இந்த ரவீந்தர்தலைமறைவாகிவிட்டார்.

ஷேர்சிங் ராணாவுக்கு பங்கஜ் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இவர் டேராடூனில் பால்பண்ணை வைத்து நடத்திவந்தார்.

இவ்வாறு போலீஸ் கமிஷ்னர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+