கோவணமும் ராமதாஸும்: திருமாவளவன் கிண்டல்
சென்னை:
"ராமதாஸ் முன்பு திமுக கூட்டணியிலிருந்து விலகியபோது, கருணாநிதி எங்கள் கோவணத்தை உருவப் பார்க்கிறார்என்றார். இப்போது, திரும்பி வந்திருப்பதால் அம்மணமாக இருக்கவும் தயார் என்பது போலத் தெரிகிறது" என்றுவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கிண்டல் செய்தார்.
இவர் இதுகுறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தே.ஜ. முன்னணியில் பா.ம.க. சேரும் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இது எங்களுக்கு அதிர்ச்சிதரவில்லை. எங்களுக்கு தே.ஜ கூட்டணியின் தலைவர் வாஜ்பாயுடனோ, அதன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டசுடனோ நேரடித் தொடர்பு இல்லை.
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை வகிப்பது திமுக தான். எனவே, பா.ம.க. குறித்து திமுகவின்நிலை என்ன என்பதைப் பொறுத்தே நாங்கள் முடிவெடுப்போம். இதுபற்றி புதுவையில் வருகிற 30- ந் தேதிநடக்கவுள்ள மைய அமைப்பில் விவாதிப்போம்.
மேலும், கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்வோம். அதே நேரத்தில் எங்களைஆதரிக்கும் தலித் மக்களின் கருத்தை ஒட்டியே எங்கள் முடிவு அமையும்.
கதர் சட்டை போடாதவரை காங்கிரசில் சேர்க்கமாட்டோம் என்று காந்தி கூறினார். அதைப் போல, குடிசையைக்கொளுத்துபவரை பா.ம.கவில் சேர்க்க மாட்டேன் என்று ராமதாஸ் உறுதிமொழி கொடுத்தால் எங்களுக்கு தலித்மக்கள் மத்தியில் வேலையே இல்லை.
ராமதாஸ் முன்பு திமுக கூட்டணியிலிருந்து விலகியபோது, கருணாநிதி எங்கள் கோவணத்தை உருவப் பார்க்கிறார்என்றார். இப்போது, திரும்பி வந்திருப்பதால் அம்மணமாக இருக்கவும் தயார் என்பது போலத் தெரிகிறது என்றுநிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிண்டலுடன் திருமாவளவன் பதிலளித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications