10 லட்சம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது விப்ரோ
சென்னை:
இந்தியாவின் "நம்பர் 1" சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ, 10 லட்சம் ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத்திறக்கவிருக்கிறது.
இவர்களுக்கு கல்வியைப் புகட்டுவதற்கு முன் வந்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் அஸீம்பிரேம்ஜியின் பெயரில் நிறுவப்பட்டுள்ள "அஸீம் பிரேம்ஜி பவுண்டேசன்", 10 லட்சம் குழந்தைகளுக்குக் கல்விஅறிவைக் கொடுக்கவுள்ளது.
சென்னையில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியின் பட்டமளிப்பு விழாவில் பேசியபோது,பிரேம்ஜி இந்தத் தகவலைக் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பணம் எல்லோருக்கும் முக்கியம்தான். பணத்துக்காகத்தான் நாம் எல்லோரும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய செலவு போக, பணத்தை வைத்து, நம் சமூகத்துக்கும் உருப்படியாக நாம்எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன்.
அதனால்தான், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியறிவைக் கொடுக்க தற்போது முன் வந்துள்ளேன். அடுத்த ஒருவருடத்தில் இந்தத் திட்டம் முழு அளவில் "அஸீம் பிரேம்ஜி பவுண்டேச"னால் செயல்படுத்தப்படும்.
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு சாப்ட்வேர் தொழில் வீழ்ந்துவிட்டதுஎன்று எவரும் கருத முடியாது. இதனால் சாப்ட்வேர் வல்லுநர்கள் தளர்ந்து போய்விடவும் கூடாது.
இந்தியாவில் சாப்ட்வேர் வல்லுநர்களின் வளர்ச்சியும், திறமையும் உலகில் "நம்பர் ஒன்"-னாகவே கருதப்படுகிறதுஎன்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தியாவில் இருந்துகொண்டே சாப்ட்வேரை வளர்த்து, தாங்களும் வளர்ந்துமகிழ்வதற்கு வேண்டிய அனைத்தும் நம்மிடமே உள்ளன என்பதை இந்திய சாப்ட்வேர் வல்லுநர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
உலகின் தலைசிறந்த 10 சாப்ட்வேர் நிறுவனங்களுக்குள் ஒன்றாக வருவதற்காகத்தான் தற்போது "விப்ரோ" முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் எங்களுடைய தற்போதைய கனவும் கூட.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற மாணவரின் நினைவாக, அதே பல்கலைக்கழகத்திலேயே அவருக்குநினைவிடம் ஒன்றை நிறுவ முயன்றனர் லேலன்டு ஸ்டான்போர்டு தம்பதியினர். ஆனால், அதற்கு 10 லட்சம்டாலர்கள் செலவாகும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் மதிப்பீடு கொடுத்தார்.
இந்த 10 லட்சம் டாலர்களில் தனியாகவே ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து விடலாமே என்று நினைத்தனர்அந்தத் தம்பதியினர். அதன் விளைவாக உருவானதுதான் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்என்று ஒரு கதையைக் கூறி பட்டமளிப்பு விழா உரையை முடித்தார் பிரேம்ஜி.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் அஸீம் பிரேம்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications