21ம் நூற்றாண்டிலும் ஆந்திராவை உலுக்கும் "தேவதாசி" முறை
ஹைதராபாத்:
தேவதாசி முறை தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருப்பினும் ஆந்திராவின் தெலுங்கானா மற்றும் ராயல்சீமாபகுதிகளில் இன்னும் அந்தக் கொடிய பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக இவையெல்லாம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள். அதனால் பல ஆண்டுகளுக்குமுன்பே சட்டப்படி தடை செய்யப் பட்டு விட்டன.
இந்த தேவதாசி முறைப்படி கோயிலுக்கு பெண்கள் நேர்ந்து விடப்படுகிறார்கள். அவர்கள் யாரையும் திருமணம்செய்து கொள்ளக் கூடாது. மீறி திருமணம் செய்து கொண்டால் இறந்துவிடுவீர்கள் என்று மிரட்டப் படுகிறார்கள்.
இவ்வாறு கொடுமைக்கு ஆளான பெண்கள் காலப்போக்கில் வலுக்கட்டாயமாக விபச்சாரத்திற்குத்தள்ளப்படுகிறார்கள்.
இந்த மாதிரி காலங்காலமாகக் கடைபிடிக்கப் பட்டுவரும் மூடநம்பிக்கைக்கு எந்த வித ஆதாரமும் இல்லை.இருப்பினும் அதை கடவுளின் உபதேசமாகக் கருதிக் கடைபிடிப்பவர்கள் இன்றைக்கும் இருப்பது தான்கொடுமையிலும் கொடுமை.
இது தொடர்பாக தேசிய சட்டக் கல்விக் கழகம் ஆந்திராவில் நடத்திய ஆய்வினை வெளியிட்டுள்ளது. அந்தஆய்விலிருந்து,
சடங்கின்படி, ஒரு பெண் பூப்பெய்தியவுடன் பெளர்னமி இரவில் அம்மனமாக நிற்க வைக்கப்படுகிறார்கள். பிறகுஅவள் தெய்வத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறாள். அதற்குப்பிறகு அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது.
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட குடியில் தான் இதுமாதிரி பழக்கங்கள் அதிக அளவில் கடைபிடிக்கப்படுகின்றன.ஆனால், மேல்குடி மக்களால் அவர்களின் சுயநலத்திற்காக இந்த மக்கள் தூண்டப்பட்டு இம்மாதிரி கொடுமைக்குஆளாகிறார்கள்.
மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6.4 கோடி பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.அவர்களில் 20 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.
இவ்வாறு கூறுகிறது அந்த ஆய்வு.
21 ஆம் நூற்றாண்டிலும் இந்தக் கொடுமை தொடர்வது ஆச்சர்யத்தையும் மிக்க வேதனையையும் அளிக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications