தொடங்கியது திமுகவின் பொதுக் குழுக் கூட்டம்: போலீஸ் தாக்குதல், பா.மக. குறித்து ஆலோசனை
சென்னை:
மிக பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.
திமுக தலைவர் கருணாநிதி, சென்னை மேயர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகுநடக்கும் கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு திரும்ப வந்துள்ளதால், தலித் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழ்நிலையில் இக் கூட்டம் நடக்கிறது.
ஸ்டாலின் மீது மேம்பால ஊழல் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அதை எதிர் கொள்வது குறித்தும்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கருணாநிதியைக் கைது செய்தபோது அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லியும் அதை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது குறித்தும், இதை மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்தும்விவாதிக்கப்படும்.
இந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்றுதெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பதால் ஏற்பட்டுள்ள தலித் கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பதுகுறித்தும் விவாதிக்கப்படும். ராமதாஸை கூட்டணியில் அடக்கியே வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இவை தவிர, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ளவும், சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வி இந்தத்தேர்தலிலும் தொடராமல் பார்த்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications