கருணாநிதி கைது விவகாரம்: மத்திய அரசின் வலையில் மேலும் 7 போலீஸ் அதிகாரிகள்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளில் இன்னும் 7 பேர் மத்தியஅரசுப்பணிக்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.
அதன்பிறகு வெளியில் வந்தவுடன் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போதுதன்னைத் தாக்கியவர்கள் எந்நெந்த போலீஸ் அதிகாரிகள் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு கருணாநிதி கைது செய்யப்பட்ட போது தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எச்சரித்திருந்தது.
அதற்காக தமிழக அரசு, நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து கைது சம்பவத்தைப் பற்றிவிசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
திமுக சார்பில் அந்த ஒரு நபர் கமிஷனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு நபர் கமிஷன் மூலம்தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருணாநிதி கூறிவந்தார்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது.
அதில் சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன், மத்திய சென்னை இணைக் கமிஷ்னர் ஜார்ஜ் மற்றும்திருவல்லிக்கேணி பகுதி துணைக்கமிஷ்னர் நெல்சன் கிறிஸ்டோபர் ஆகியோரை உடனடியாக மத்திய அரசுப்பணிக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இவர்கள் மூவருமே கருணாநிதி கைதில் நேரடியாகவே தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர் மற்றும் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் மூவர் மீதும் திமுக தரப்பில் கடும் வெறுப்பிருந்து வந்தது. அதிலும் முத்துக்கருப்பன் மீது கருணாநிதிக்குஅளவற்ற கோபம் உள்ளது.
அவரது சூட்டைத் தனிக்கவும் மத்திய அமைச்சர்கள் மாறன் மற்றும் பாலுவின் பிரஷர் காரணமாகவும் மத்திய அரசுஇந்த அதிரடி நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த மாதிரியான அதிரடி நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய அதிகாரிகள் இன்னும் 7 பேர்இருக்கிறார்கள் என்று அடித்துச் சொல்கிறது திமுக வட்டாரம்.
அவர்களின் பெயர்கள் வருமாறு,
1. முகமது அலி, டி.ஐ.ஜி- சிபிசிஐடி
2. சாரங்கன், துணைக் கமிஷ்னர்
3. முருகேசன், உதவிக்கமிஷ்னர்
4. பிரபாகரன், துணைக் கமிஷ்னர்
5. ரத்தோர், துணைக் கமிஷ்னர்
6.ஆபாஷ்குமார், துணைக் கமிஷ்னர்
7. சண்முகராஜேஸ்வரன், துணைக் கமிஷ்னர் ஆகியோர்.
எனவே, இவர்கள் மீதான மத்திய அரசின் நடவடிக்கையை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications