சென்னை விமான நிலையத்தை வீடியோ எடுத்த 2 இலங்கை வாலிபர்கள் கைது
சென்னை:
இலங்கையைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சென்னை விமான நிலையத்தை வீடியோ எடுக்கும் போதுசந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (சனிக்கிழமை) வீடியோ கேமராவை வைத்து சென்னை விமான நிலைய சுற்றுப் பகுதிகளை படம்எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம்சென்று, ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள் 2 பேரும் சிங்கள மொழியில் பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.உடனே இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தந்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை விசாரித்த போது, அவர்கள் 2 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னைத்துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது.
கடந்த வாரம் இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இலங்கை போர் விமானங்கள் பலஅழிக்கப்பட்டன.
அதனால் கொழும்பு விமான நிலையத்தில் விமானங்கள் இறங்க முடியவில்லை. எனவே, பல விமானங்கள்சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், இவர்கள் ஏன் சென்னை விமான நிலையத்தைப் படமெடுக்க வேண்டும் என்ற சந்தேகம்எழுந்துள்ளது.
இதனால் அந்த இளைஞர்களிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications