மாநகராட்சியில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஸ்டாலின்
சென்னை:
சென்னையில் பெரம்பூர் மேம்பாலத்தைக் கட்டி முடிப்து குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்திலிருந்து மேயர் ஸ்டாலின்வெளிநடப்பு செய்தார்.
சில நாட்களுக்கு முன்பு பொதுப் பணித்துறை துரைராஜ் அந்தப் பாலத்தைப் பார்வையிட்டு விட்டு இந்தப் பாலம்மட்டும் ஏன் இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை என்று கேட்டார்.
அதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து, அதிமுக அரசு இடையூறு செய்யாமலிருந்தால் விரைவில் அந்தப் பாலத்தைக்கட்டி முடித்துவிடுவோம் என்று சொல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்று (சனிக்கிழமை) ஸ்டாலின் தலைமையில், அந்தப் பணியைத் துவக்குவது பற்றிஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாநகராட்சி கமிஷ்னர் ஆச்சார்யலு, தலைமை இன்ஜினியர் பூபாலன் மற்றும் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்கட்சி அதிமுக உறுப்பினர்கள் சிலர் கராத்தே தியாகராஜன்தலைமையில் உள்ளே புகுந்தார்கள். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் அதிகாரிகளிடம், இவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்களா என்றுகேட்டார். அதற்கு அதிகாரிகள் அனைவரும் மவுனம் சாதித்தனர். ஸ்டாலினுக்கு யாருமே பதில் சொல்லவில்லை.
இதனால் மேலும் கோபமடைந்த ஸ்டாலின் கூட்டத்திலிருந்து எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தார்.
பின்னர் நிருபர்களிடம் கோபமாகப் பேசிய மேயர் ஸ்டாலின் கூறுகையில்,
இந்தக் கூட்டம் நடக்கவிடாமல் செய்வதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. இதில் தேவையில்லாமல்பிரச்சனைகளைக் கிளப்பவே தியாகராஜன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் யாரும் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இவர்களைப் போல் எங்கள் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டால் என்ன ஆகும், கூட்டத்தை எப்படி நடத்த முடியும் என்று கேட்டார்.


Click it and Unblock the Notifications
