மத்திய அரசுடன் மீண்டும் மோதுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முத்துக்கருப்பன் உள்ளிட்ட ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அனுப்பும் விவகாரத்தில் முதல்வர்ஜெயலலிதா மத்திய அரசுடன் மீண்டும் மோத தயாராகிறார்.

கடந்த ஜூன் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை ஜெயலலிதாதொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன், பாலுவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டபோதுஅதை நிராகரித்தார் ஜெயலலிதா.

பிறகு கருணநிதியை விடுவித்தார். தொடர்ந்து மாறன், பாலுவை ஜாமீனில் விடுதலை செய்தார். ஆனால்அவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற முடியாது என அறிவித்துவிட்டார்.

இந்த இருவரும் போலீசாரை கடமைசெய்யவிடாமல் தடுத்துள்ளனர். அரசு ஊழியரைக் கடமைஆற்றவிடாமல்தடுத்தால் அமைச்சராக இருந்தாலும், ஏன் பிரதமராக இருந்தால் கூட அவர்களைக் கைது செய்ய சட்டத்தில் இடம்உள்ளது. எனவே அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறமுடியாது என்று அறிவித்தார்.

ஏற்கனவே ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து அவரிடம் நிறைய குட்டுப்பட்டவர்கள் பாரதீய ஜனதாதலைவர்கள். ஜெயலலிதாவோடு கூட்டணி இருந்தபோது அதைக் காப்பாற்ற ஜஸ்வந்த் சிங் சென்னைக்கும்டெல்லிக்கும் அலையாய் அலைந்து கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் ஜெயலலிதா காலைவாரி விட்டார்.

அதற்காக இப்போது ஜெயலலிதா அரசைக் கவிழ்த்து விட பா.ஜ.வுக்கும் ஆசைதான். ஆனால் மாநிலங்களவையில்போதிய பலமில்லாததால் அதைச் செய்ய பா.ஜ.க.விரும்பவில்லை.

இந் நிலையில் திமுக தந்த பிரஷர் காரணமாக ஜூலை 4-ந்தேதி மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒரு கடிதம்எழுதியது. இனி இதுபோன்று எதிர்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்ட போது முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தது.

இதற்கு ஜெயலலிதா கையிலெடுத்த பதில் அஸ்திரம் ஒரு நபர் விசாரணைக் கமிஷன். முன்னாள் நீதிபதி ராமன்தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்து கைது சம்பவத்தைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

இதைக்கண்ட திமுக அலறியது.

இந்த ஒருநபர் கமிஷன் மூலம் எனக்கும் பாதிக்கப்பட்ட திமுகவினருக்கும் நியாயம் கிடைக்காது என்று கருணாநிதிகூறினார்.

இதைத் தொடர்ந்து மாறன் போன்றவர்கள் மீண்டும் மத்திய அரசுக்குக் கொடுத்த குடைச்சலின் விளைவாககருணாநிதி கைதில் தொடர்புள்ள சென்னை கமிஷ்னர் முத்துக் கருப்பன், ஜார்ஜ், நெல்சன் ஆகிய 3 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கும் ஜெயலலிதா தரப்பு அவ்வளவு சீக்கிரம் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

கருணாநிதியைக் கைது செய்து தனது உத்தரவை நினைத்தமாதிரி நிறைவேற்றிய அதிகாரிகள் பழிவாங்கப்படுவதைவிரும்பாத ஜெயலலிதா, இதை எப்படி எதிர்கொள்வது என்று கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனையில்இறங்கியுள்ளார்.

இதற்காக தமது அமைச்சரவை சகாக்களோடு, சட்டவல்லுநர்களையும் கலந்து ஆலோசித்து வருகிறார்.

ஜெயலலிதா பேட்டி:

இன்று (திங்கள்கிழமை) நடந்த ஆலோசனைக் கூட்டத்தை முடித்து விட்டு வெளியில் வந்த முதல்வரிடம் நிருபர்கள்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துக் கேட்டதற்கு,

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவரங்களை பத்திரிக்கைகளுக்குத் தரமுடியாது. இன்னும் அதுபற்றி முழுமையாகமுடிவுசெய்யவில்லை. மாநில தலைமை வழக்கறிஞருடன் இதுபற்றி நான் ஆலோசனை செய்ய உள்ளேன்.

அதன் பிறகுதான் மத்திய அரசுக்கு பதிலனுப்ப முடிவு செய்துள்ளோம்.

மேலும், அதிகாரிகளை மத்திய அரசு அழைத்துக் கொண்டதை நியாயப்படுத்திப் பேசிவரும் எதிர்கட்சிகளின்கருத்துக்கு , இந்தநேரத்தில் நான் பதில்சொல்ல விரும்பவில்லை என்றார்.

ஜெயலலிதா நடத்திவரும் இந்த அதிதீவிர ஆலோசனை மூலம், இவர் மத்திய அரசின் ஆணைப்படி அந்த 3பேரையும் அவ்வளவு சீக்கிரம் அனுப்பமாட்டார் என்று தெரிகிறது.

இதன்மூலம் மத்திய அரசுடன் மீண்டும் மோத ஜெயலலிதா முடிவுசெய்து விட்டார் என்பது புலனாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+