சென்னையில் ஆகஸ்டு 4ல் தெற்காசிய அமைதி மாநாடு
சென்னை:
முதல் முறையாக தெற்காசிய அமைதி மாநாட்டின் ஆண்டு கூட்டம் ஆகஸ்டு மாதம் 4ம் தேதி சென்னையில் நடக்கஉள்ளது. இது 3 நாட்கள் நடைபெறும்.
இதில் பல தெற்காசிய நாடுகளிலிருந்து 15,000 பிரதிநிதிகளும் பாகிஸ்தானிலிருந்து 100 பிரதிநிதிகளும்பங்கேற்கவுள்ளனர். பர்மாவிலிருந்தும் பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பாபர்க்கப்படுகிறது.
புகழ் பெற்ற அகில இந்திய காந்தீயவாதிகள் மாநாடு அமைப்பாளர்கள்தான் இந்த மாநாட்டையும் ஏற்பாடுசெய்துள்ளனர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக நல அமைப்பின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில்பங்கேற்கிறார்கள்.
திபெத் மதத் தலைவர் தலாய் லாமா அமைதி மாநாட்டை துவக்கி வைப்பார். மாநாட்டின் நிறைவு நாளான ஆகஸ்டுமாதம் 6ம் தேதி, ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கப்படும். அன்று மிகப் பெரிய அமைதி ஊர்வலம் நடைபெறும்.அதன் பின் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் விழாவின் நிறைவு உரையை நிகழ்த்துவார்.
கர்நாடக ஆளுனர் ரமாதேவி, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலோட் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதி கே.ஆர்நாராயணன், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர் என்றார்நிர்மலா.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications