பிற மாநில முதல்வர்களை துணைக்கு அழைக்கிறார் ஜெ.
சென்னை:
கருணநிதியை கைது செய்த 3 தமிழக போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பதவிக்கு அனுப்புமாறு வாஜ்பாய்அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும்முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லி வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி அவர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறார்ஜெயலலிதா.
அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த வாரம் தமிழக அரசின் முக்கியப் பணிகளை நிர்வகிக்கும் 3 உயர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாகமத்திய அரசுப் பணிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
இதை நீங்கள் அனைவரும் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதில் போலீஸ் சேவை விதிகளில் 6-வது பிரிவை பயன்படுத்தப் போவதாக மத்தியஅமைச்சர்கள் பேசியுள்ளனர்.6-வது விதியில் மத்திய- மாநில அரசுகளுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டால், அப்போது எப்படி செயல்படுவதுஎன்பது குறித்தும் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளன.
6-வது விதியின்படி மத்திய அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் அதிகாரிகளின் பட்டியலை முதலில் மாநில அரசுகள்மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியல் மத்திய அரசின் எந்தெந்த அமைச்சகங்களில் காலியிடங்கள்உள்ளதோ அந்தந்த அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும்.
அவர்கள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு அனுப்புவார்கள்.
அதன் பிறகு மத்திய அரசு அந்தப் பட்டியலை மாநில அரசுகளுக்கு அனுப்பி அதிகாரிகளைக் கேட்கும். இதன் பிறகுதான் அந்த அதிகாரிகள் மாநில அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பபடுவார்கள்.
இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபு என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் நீண்டகாலமாகக் கடைபிடிக்கப்பட்டுவந்த இந்த மரபுகளை மீறி, மாநில அரசின் பதிலைக்கூடஎதிர்பாராமல் உடனடியாக 3 அதிகாரிகளை விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கு, மாநில நிர்வாகத்தைப் பல வழிகளில் சீர்குலைத்து விடும்.
மேலும் சிறந்த அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் மாநில அரசுகளுக்கு முன்னுரிமை உள்ளது. இந்தஉரிமைகளை மறுக்கும் முயற்சி, மாநில அரசுகளுக்கு அதன் பணிகளை நிர்வகிப்பதில் கடினம் ஏற்படுத்திவிடும்.
எனவே ஒவ்வொரு மாநில அரசும் இதில் தீவிர கவனம் செலுத்தி, மத்திய அரசுக்குத் தங்கள் கருத்தை தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். இதுகுறித்த தங்களது கருத்தை விரைவில் மத்திய அரசுக்குத் தெரிவித்தால்நன்றியுடன் இருப்பேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதன் மூலம் மற்ற மாநில அரசுகளின் உதவியைப் பெற்று தமது அதிகாரிகளைத் தமிழகத்துக்குத் தக்கவைக்கஜெயலலிதா முயற்சிக்கிறார் என்பது புலனாகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications