தீவிரவாதிகளை ஒழிக்க போலீசார் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்: ஜெ.
சென்னை:
தேச விரோதிகளோடு கைகோர்த்துள்ள வீரப்பன் போன்ற பயங்கரவாதிகளை ஒழிப்பதில் போலீசார் தீவிர அக்கறைகாட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டம் பெருகிவிட்டது.இவர்களை அடக்கி ஒடுக்குவதே போலீசாரின் தலையாய கடமையாகும்.
தேசவிரோத சக்திகளோடு வீரப்பன் கும்பல் கைகோர்த்து திரிகிறது. இவனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படைஉதவியுடன் தற்போது இந்த அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மகளிர்க்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து விட்டன. எனவே, தேவைப்படும் இடங்களில் புதிதாகமகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும். மேலும், மகளிர்க்கு உதவுவதற்காகவே தனிப் பிரிவுகளும் காவல்நிலையங்களில் ஏற்படுத்தப்படும்.
பொது மக்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சமூகப் பொருளாதாரப் பிரச்சனையும் ஒரு முக்கியகாரணமாகும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் போலீஸ் அதிகாரிகள் முன் வந்து, மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.
மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் முன்னுரிமை அளிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள்வழங்கப்படும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் தீவிர முன்னுரிமை அளிக்கப்படும்.
பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மாவட்ட கலெக்டர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கே முழுமையாகச் சென்று சேர்ப்பதே மாவட்ட கலெக்டர்களின் கடமையாகும்என்றார் ஜெயலலிதா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications